|
![]() |
லெய் ஜென்பாங்
லெய் ஜென்பாங்(1916-1997) புகழ்வாய்ந்த திரைப்பட இசை அமைப்பாளராகவும் நாட்டின் முதல் தர இசை அமைப்பாளராகவும் இருந்தார். அவர் சீன இசை வல்லுனர்களின் மையம் மற்றும் சீனத் திரைப்படச் சங்கம் போன்றவற்றின் இயக்குநர், சீநத் திரைப்பட இசை அமையத்தின் துணை இயக்குனராகவும், CPPCCஇன் ஆறாவது சபை உறுப்பினராகவும் இருந்தார். லெய் 1916 மே மாதம் பெய்ஜிங்கில் பிறந்தார். இவர் ஒரு மன்சூரியன். அவருடைய குடும்பம் பணக்காரக் குடும்பம். பண்பட்ட குடும்பம். எனவே லெய் மிகவும் இளமையான இருந்த போதே பெய்ஜிங் இசை நாடகத்தில் மிகவும் ஆர்வம் கொண்டார். அவர் 7 அல்லது 8 வயதாக இருந்த போது அவர் பெய்ஜிங் ஒபெரா காட்சிகளை முணுமுணுக்கவும் பெய்ஜிங் ஒபெராவில் நடிக்கவும், எர்ஹு பீடிலுடன் சில பாடல்களைப் பாடவும் முடிந்தது.
1939 ஜனவரியில் லெய் படிப்பதற்கு ஜப்பானுக்குச் சென்றார். அவருடைய திறமையான செயல் திறன் காரணமாக அவர் ஜப்பான் உயர் பாரம்பரிய இசைத் துறையில் ஒரு இள நிலைப் பட்டதாரியானார்.
1943இல் லெய் சீனாவுக்குத் திரும்பி பெய்ஜிங் பெண்கள் உயர் நிலைப் பள்ளி மற்றும் குய் ஜொங் பெண்கள் உயர் நிலைப் பள்ளியில் வெற்றிகரமாகக் கற்பித்தார். ஜப்பானுக்கு எதிரான போருக்குப் பின்னர் அவர் தனது சொற்ப நேரத்தில் 50 பேருக்கு அதிகமாகக் கொண்ட ஒரு இசைவாணர்களின் இசைக் குழுவைத் தொடங்கினார்.
லெய் வாத்திய இசைக்குள் துன்பியல் இன்னிசை என அழைக்கப்பட்ட ஒரு சீனப் பழமை இசை மெட்டை பயன்படுத்தினார். இது லெய்யினுடைய முதல் பகுதி வேலையாக இருந்து வெளிப்படையாக பாடப்பட்டது.
1949 ஜுனில் லெய் இதையமைப்பை நோக்கமாகக் கொண்டு சீனத் திரைப்பட இசை மன்றத்துக்குச் சென்றார். இது அவருடைய திரைப்பட வட்டத்தின் நுழைவானது.
30 வருடங்களுக்கு மேலாக லெய் 100க்கு மேற்பட்ட திரைப்படப் பாடல்களை இயற்றினார். அவர் நாட்டுப்புறக் கலைஞர்களிடம் இருந்து கற்பதை வற்புறுத்தி, சாதாரண மக்களின் அன்றாட வாழ்க்கையை ஆராய்ந்தார். அவர் பல இசை படைப்புக்களை தமக்கே உரிய புதுமையான நடையில் இயற்றினார். ்வர் தரைப்படங்களுக்காக இயற்றிய இசை மெட்டுக்கள் சிறுபான்மை இன மக்களின் வாழ்க்கையை பிரதிபலிப்பவை. இனங்களின் ஆர்வத்துடன் உள்ள பாடல்கள் ஐந்து தங்கப் பூக்கள், மூன்றாவது சகோதரி லியு, பனிப்பாறைக்கு விருந்தாளி போன்றவற்றை உள்ளடக்குகின்றது.
1960இல் அவர் இயற்றிய மூன்றாவது சகோதரி லியுக்கான இசையானது பைகுவா விருதுகளின் இரண்டாவது பிரிவில் சிறந்த இசைக்கான விருதை வென்றது. அவரது பின்னானளய படைப்புக்களும் போட்டிகளில் பரிவுகளை வென்றன.
லெய் திரைப்படங்களுக்காக இயற்றிய இசையானது தொங் சுன்துய், மலனின் பூரிப்பு, ஐந்து தங்கப் பூக்கள், தா ஜியும் அவருடைய தந்தையும், மூன்றாவது சகோதரி லியு, ஜி ஹொங் சாங் மற்றும் ஏனையவற்றை உள்ளடக்குகின்றது. அவருடைய அநேகமான இசை வேலைகள் தசாப்தங்களாக சீனா முழுவதும் பிரசித்தி பெற்று இருக்கின்றன.
[மகிழுங்கள்]: 《ஏன் அந்த பூ அதிக சிவப்பாக இருக்கின்றது》
|