• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
[இசை அமைப்பாளர்கள்]

லியு தியன் ஹுவா

நவீன சீன இசை வல்லுனரான லியு தியான் ஹுவா(1895-1932) பாரம்பரிய சீன வயலினை இசைப்பதில் சிறப்புத் தேர்ச்சி அடைந்ததோடு பல மறக்கமுடியாத இன்னிசைகளை உருவாக்கினார்.
1919இன் மே நான்காவது இயக்கத்துக்கு முன்னர் சீனாவின் ஒரு தெற்கு நகரத்தில் லியு ஒரு உயர் நிலைப் பள்ளியில் இசை ஆரிசியராக இருந்தார். அவர் பாரம்பரிய சீன இசைக்கும் புத்துயிர் ஊட்டுவதற்குத் தன்னை அர்ப்பணித்தார். லியு ஒவ்வொரு நாளும் காட்டில் அமைதியாக உட்கார்ந்தபடி நவீன உலகில் பாரம்பரியச் சீன இசையின் பங்கினைப் பற்றி ஆழ்ந்து சிந்தித்தார். ஒரு நாள் பெய்ஜிங் பல்கலைக்கழகத்தில் இருந்து வந்த ஒரு கடிதம் அவருடைய வாழ்க்கையை மாற்றியது. அழரை இசை கற்பிக்க வரும்படி பெய்ஜிங் பல்கலைக்கழகத்தின் புதிய வேந்தர் அழைப்பு விடுத்திருந்தார்.

பெய்ஜிங்கில் தம்மைப் போன்று ஆர்வமுள்ள பலரை சந்திதார். அவருடைய சீன இசை பயிற்சியும் கோட்டாடும் அங்கே முதிர்வடைந்தது. ஆனால் மே நான்காவது இயக்கம் ஓய்ந்ததும், பெய்ஜிற் பல்கலைக்கழகத்தில் அவருடைய பதவி நீக்கப்பட்டது. ஆயினும், அவர் இதே போன்ற ஒரு பதவியை பெய்ஜிங் மகளிர் சாதாரணப் பல்கலைக்கழகத்தில் பெற்றார். அவருடைய புகழ் சீன இசை உலகில் வளர வளர அதிக அளவில் மாணவர்கள் அவரிடம் வந்தார்கள். 1930இல் லியு தம்மைப் போன்ற கருத்துடைய நண்பர்களுடன் சேர்ந்து பெய்ஜிங் ஹோட்டலில் ஒரு தனிப்பட்ட இசை நிகழ்ச்சியை அளித்தார். அது நல சீனாவில் அதிக முக்கியமான சம்பவமாக இருந்தது.

ஆனால் நீண்ட காலமாக நோய்வாய்ப்பட்டிருந்த லியு தியன் ஹுவா இசை நிகழ்ச்சி நடத்திய இரண்டாவது வருடத்தில் தமது 37 வயதில் இறந்தார்(1932).

ஒளியை நோக்கி, அழகான இரவு, வெற்று மலையில் பறவைகளின் இசை, கசப்பு, துக்கப்பாடல் போன்ற பத்து எர்ஹு இசைத் துணுக்குகள் அவருடைய மகத்தான படைப்புக்களாகும். மேலும் பாடல்கள் மற்றும் நடனங்களுக்கான இசையும் இதில் அடங்கும்.

[கேட்டு மகிழுங்கள்]: 《அழகான இரவு》

1 2 3 4 5 6 7 8 9 10 11 12
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040