ப்பு லின்
ப்பு லின் இசைப் பாடல் ஆசிரியர் மற்றும் இசையமைப்பாளர் ஆவர். இவர் 1946ம் ஆண்டு ஜனவரி மாதம் 17ஆம் தேதி ஹெய் லோங் ஜியாங் மாகாணத்தில் ப்புஜி நகரத்தில் பிறந்தார். இவர் மக்கள் விடுதலை இராணுவத்திந் கலைக் கல்லூரியின் இசைத் துறையில் பட்டதாரியானார். இவர் ஒரு நடிகராகவும், துணை இயக்குநராகவும் மற்றும் கடற்படை கலைச் சங்கத்தில் கலை ஆசிரியராகவும் இருந்துள்ளார். இவர் தற்போது இசை சங்கத்தின் அபிவிருத்தி சபையின் பிரதி இயக்குனராகவும் சீன மெல்லிசை நிறுவனத்திந் துணைத் தலைவராகவும் இருக்கிறார்.
ஏறத்தாழ 40 ஆண்டுகளாக கலையில் தொடர்ந்து இருக்கும் ப்பு லின் சர்வதேசப் புகழ் பெற்ற பல பாடல்களுக்கு இசையமைத்துள்ளார். இவருடைய படைப்புக்கள் சூரியன் கடும் சிவப்பாக இருக்கிறது மற்றும் தலைவர் மாவோ அன்புக்குரியவர், தாயின் முத்தம், லோ உ லன் பெண்மணி, பிறப்பிடத்தை நோக்கிய காதல் மற்றும் பலவற்றை உள்ளடக்கியது. அவருடைய பாடல்களுக்கு மேலாக அவர் தன்டைக்கமாக "சாதாரண மக்களால் விரும்பப்படுகின்ற எந்த ஒரு பாடலுடனும் நான் திருப்தியடைகிறேன்" எனக் கூறுகின்றார். உண்மையாக இவர் விரும்புகின்ற பல பாடல்கள் விமர்சகர்களிடையே மிகவும் பிரபலமானதாக இருந்ததில்லை. ஆனால் இவர் அதனுடன் அமைதியாக இருக்கிறார். அவர் "எவ்வளவுக்கு எவ்வளவு நீண்டகாலம் நாங்கல் கலையை எங்களுடைய தொழிலாகத் தெரிவு செய்துவிட்டோமோ அவ்வளவுக்கு அவ்வளவு அப்படிப்பட்ட முடிவை பழக்கப்படுவதற்கு ஏற்க வேண்டி இருக்கின்றது" எனக் கூறினார்.
ப்பு லின் பாடல்கள் மற்றும் இசைகளின் ஒரு கணிசமான எண்ணிக்கையை திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சித் தொடர்களான பருவத்தின் உள்ளேயும் வெளியேயும், காதலர்களுக்கு இடையிலான அன்பு, சூ தெ, லியு ஷௌ ச்சி மற்றும் ஏனையவை போன்றவற்றை தொகுப்பதற்கு பயன்படுத்தினார். இவர் பல இசைப் போட்டிகளுக்கு உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் நடுவராக இருந்திருக்கிறார். இவர் ரசிகர் உலகம் பத்திரிகையை உருவாக்கி அதற்கு பிரதான ஆசிரியராக இருந்தார். தற்போது இசையமைப்பு மட்டும் ப்பு லின்னின் ஒரு பகுதி வேலையாக இருக்கிறது. அவருடைய உயர்ந்த மனவிருப்பம் என்னவென்றால் இசைக் கோட்பாடுகளை ஆராய்வதும், இளம் வயதினர்களுக்கு கற்பிப்பதும் ஆகும்.
1986 மற்றும் 1987இல் ப்பு லின்னின் தனிப்பட்ட இசை நிகழ்ச்சிகள் முறையே ஹர்பின் மற்றும் சி ஆன் நகரிலும் நடைபெற்றன. 2001இல் CCTVஇன் இசை மற்றும் ஓவிய Fashion, ப்பு லின் படைப்புக்களின் சிறப்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்தது.
[மகிழுங்கள்]: 《ஊது சங்கே》
1 2 3 4 5 6 7 8 9 10 11 12