• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
[இசை அமைப்பாளர்கள்]

நியே ஆர்

பிரபலமான சீன இசை அமைப்பாளர் நியே ஆர் 1912ம் ஆண்டு பிப்ரவரி 14ஆம் நாள் புன்நான் மாநிலத்தில் உள்ள குன்மிங் நகரில் பிறந்தார். அவர் 1918இல் குன்மிங் சாதாரணப் பள்ளியைச் சார்ந்த தொடக்கப் பள்ளியில் சேர்ந்தார். பாடசாலையில் அவர் மாடங்களைத் திறமையாகப் பயின்றிதோடு, இசையிலும் மிக ஆர்வம் கொண்டிருந்தார். அவருடைய ஓய்வு நேரங்களில் அவர் புல்லாங்குழல், எர்ஹு, வயலின், மூன்று நாண்கருவி, yu-kin போன்ற நாட்டுப்புற இசைக் கருவிகளை இசைக்க நாட்டுப்புற இசைவாணர்களிடம் கற்றார். 1925இல் அவர் புன்னான் மாநிலத்தில் உள்ள முதல் தர சார்ப்பு இடைநிலைப் பள்ளியில் சேர்ந்தார். இந்தக் காலத்தில் முன்போக்கான வெளியீடுகள் மற்றும் இன்ட்டர் நேஷனல் போன்று புரட்சிகரமான பாடல்களின் செல்வாக்கு நியே ஆரிடம் அதிகம் இருந்தது. 1927இல் இவர் யுன்னானின் முதல்தரமான சாதாரண பள்ளியில் படிப்பை முடித்து தேர்ச்சி பெற்றார். அவர் தமது நண்பர்களுடன் சேர்ந்து 99 இசைச் சங்கத்தைத் தொடஹ்கினார். அவர் அடிக்கடி பல்வேறு இசை மற்றும் நாடகங்களில் பங்கு பெற்றியதோடு வயலின் மற்றும் பியானோவை இசைப்பதற்கும் கற்க ஆரம்பித்தார்.

1930, நவம்பரில், நியே ஆர் ஷாங்காயில் ஏகாதிபத்திரயத்துக்கு எதிரான மகாக் கூட்டமைப்பில் இணைந்தார். 1931ம் ஆண்டு மார்ச் திங்களில் ஒளிமயமான சந்திர இசை நாடகச் சங்கத்தில் வயலின் இசைப்பவராகச் சேர்ந்து, பியானோ, ஆர்மோனியம் மற்றும் இசை இயற்றுவது போன்றவற்றைத் தானாகவே கற்றார். 1932, ஏப்ரலில் அவருக்கு இடது சாரி நாடக ஆசிரியரும் கவிஞருமான தியன் ஹன்னுடன் தொடர்பு ஏற்பட்டது. பின்னர் இவர் இடது சாரிகளின் கலை வட்ட நபர்களுடன் தொடர்புகளை ஏற்படுத்தினார். தியன் ஹன்னுடனான நட்பும் ஒத்துழைப்பும் இவருடைய கலைச் சாதனைகள் மீது பரந்த செல்வாக்கினை செலுத்தியது. 1932 ஆகஸ்ட் திங்கள் பெய்ஜிங் இடது சாரி நாடக ஆசிரியர்கள் மற்றும் இசை வல்லுனர்களின் கூட்டமைப்பை உருவாக்குவதில் மற்றும் மேசையேற்றங்களில் ஆர்வமாகப் பங்கு கொள்வதற்காக அவர் பெய்ஜிங் சென்றார். அவர் டோனோங் என்ற வெளிநாட்டு ஆசிரியரிடம் வயலின் கற்பதைத் தொடர்ந்தார். நவம்பரில் அவர் ஷங்காய்க்குத் திரும்பினார்.

நியே ஆர் ஷாங்காய்க்குத் திரும்பியதும் லியன் குவா திரைப்படக் கம்பனியில் வேலை செய்ய ஆரம்பித்தார். அவர் பெரு விருப்பு மற்றும் ஆற்றலுடன் இடது சாரிகளின் இசை நாடகங்கள், திரைப்படங்கள் போன்ற வேலைகளில் பங்கு பற்றி இசையமைப்பு மற்றும் விம்ர்சன நடவடிக்கைகளில் ஈடுபட்டார். அவர் சோவியத் ஒன்றிய நண்பர்கள் என்ற இசைக் குழுவில் இணைந்து புதிய இசையின் சீனக் கருத்தரங்கை நடத்தினார். அவர் பின்னர் சீன இடது சாரி நாடக ஆசிரியர்கள் கூட்டமைப்பில் சேர்ந்தார்.

1933இல் நியே ஆர் பாடலை இயற்றி இசையமைக்க முயற்சித்தார். அவர் சுரங்கத் தொழில் பாட்டு மற்றும் நாளேடு விற்கும் பையன் பாட்டு போன்ற மக்களுக்குப் புத்துயிர் அளித்த பாடல்களை இயற்றினார். 1934 ஏப்ரலில் EMIஇல் வேலை செய்யத் தொடங்கினார். அவர் ரென்குவாங்குடன் இசை இலகாவில் பணிபுரிந்தார். அவர்கள் சில முன்போக்கான பாடல்களைப் பதிவு செய்தார்கள். நியே ஆர்க்கு இந்த வருடம் இனிமையாக இருந்தது. இவர் பிரபலமான பல பாடல்களான விரதான தெருப் பாடல், முன்னோடி, துறைமுகப் பணியாளர் பாடல், அழகான ஏரியின் வசந்த கால விடியல் மற்றும் போன்ற இசைப்பாடல்களை இயற்றினார். 1935இல் அவர் ஓர் தொடர் பாடல்களை இயற்றினார். நவ சீனா உதயமான பின்னர் ஓர் தேசிய கீதமாகத் தெரிவு செய்யபப்ட்ட மக்கள் படையின் அணிவகுப்பு என்ற பாடலும் இதில் அடங்கும்.

1935 ஏப்ரல் 18இல், நியே ஆர் டோக்கியோவுக்குச் சென்றார். அங்கு ஐப்பானிய இசையின் போக்கு, நாடகங்கள் மற்றும் திரைப்படங்களை ஆய்வு செய்தார். அவர சீன இசையின் புதிய வளர்ச்சியை ஜப்பானிய கலை வட்டத்துக்கு அறிமுகப்படுத்தியதுடன் அவர் வெளிநாட்டு மொழியையும் இசையையும் கற்கத் தொடங்கினார். அவர் ஜப்பானில் ஜுலை 17இல் துதிர்ஷ்டவசமாக தமது 23 வயதில் நீரில் மூழ்கி இறந்தார்.

அவரின் குறுகிய வாழ்வில் நியே ஆர் இரண்டு வருடங்கள் மட்டும் இசை தொகுப்பில் ஈடுபட்டிருந்தார். எவ்வாறாயிலும் அவர் மொத்தமாக 41 இசை துணுக்குகளை தொகுத்து வைத்து இருந்தார். இவை பிரதான விடயங்கள் அல்லது எட்டு திரைப்படங்களுக்கான மூன்று கதா பாத்திரங்கள் மற்றும் ஒரு வசிப்பிட அரங்கு, ஏனைய பாடல்கள் மற்றும் சரிப்படுத்தப்பட்ட மக்கள் இசை போன்றவற்றை உள்ளடக்குகின்றது.

[கேட்டு மகிழும் இசை]:《தேசிய கீதம்》

1 2 3 4 5 6 7 8 9 10 11 12
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040