• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
[இசை அமைப்பாளர்கள்]

வாங் லுவோ பின் 

வாங் லுவோ பின் பிரபல படைந்து கொண்டிருக்கும் சீன மேலைத் தேச மக்கள் இசைக்கு அர்ப்பணித்துக் கொண்ட ஓர் புகழ்மிக்க இசை வல்லுனராக திகழ்கிறார். அவர் நவீன சீனப் பாடல்களின் மன்னராகக் கருதப்படுகிறார். வாங் லுவோ பின் 1913ம் ஆண்டு தைமாதம் பெய்ஜிங்கில் பிறந்தார். அந்தக் காலத்தில் புதிய கலாச்சாரத்தின் பிரச்சாரம் நடைபெற்றுக் கொண்டிருந்தது. எனவே வாங் பல பள்ளிப் பாடல்களை கற்கப் பெற்றார். அதே வேளையில் அவர் சில மேலைத் தேச மற்றும் ஜப்பானிய மெட்டுக்களைக் கற்கத் தொடங்கினார். 1924இல் தொங் தேசத்தில் உள்ள ஒரு மிஷன் பள்ளியில் வாங் கல்வி கற்றார். மாதா கோயிலில் பாடகர்கள் தங்கும் இடத்தில் இவர் இராகங்கள் மற்றும் இசைக் கருவிகளின் நரம்புகளின் அடிப்படைகள் போன்றவற்றைக் கற்றார். 1931இல் வாங் பெய்ஜிங்கில் உள்ள சாதாரணப் பாடசாலையில் சேர்ந்து கலைக்கல்வியில் சிறப்பு எய்தினார். அங்கு அவர் வாய்ப்பாட்டு மற்றும் பியானோ போன்றவற்றை திருமதி ஹர்வாத் இடம் இருந்து கற்றதோடு ஒரு முழுமையான இசைக் கல்வியை பெற்றார்.
1937இல் வாங் பிரபலமான எழுத்தாளர் திங் லிங்னால் தலைமை தாங்கிய வட மேற்குப் போர்ச் சேவைக் குழுவில் இணைந்தார். இந்தக் காலப்பகுதியில் வாங் போர்க்களத்தில் பிறப்பிடத்தோழன், சலவைச்சாலை போன்ற பாடல்களை இயற்றினார். 1938 வசந்த காலத்தில் சின்ஜியாங்குக்கு வாங் அனுப்பப்பட்டார். மேற்கில் வாங் ஒரு உயர்ந்த மக்கள் இசை விடயங்களைக் கேட்டு, பாடல் மெட்டுக்களை பெருமளவு இழந்தார். ஒரு முறை ஒரு உய்கூர் ஓட்டுநர் இவருக்கு த்தாபன் நகரம் என அழைக்கப்பட்ட ஒரு ருலுப்பன் நாட்டார் பாடலைப் பாடினர். வாங் ஒரு முறை இந்தப் பாடலால் கவரப்பெற்று உடனடியாக இந்த மெட்டைக் கற்றார். அவர் இந்தப் பாடல்களை மொழிபெயர்த்து அந்த மெட்டுக்கு சாரதிப் பாடல் என மறு பெயரிட்டார். இது அவர் மீட்ட சிறுபான்மை இனத்தின் அடிப்படை மூலங்களுடன் உள்ள முதலாவது நாட்டார் பாடலாகும். இது அவருடைய வாழ்க்கையில் அவர் தொகுப்பானராக இருந்த போது ஓர் திருப்பு முனையாக அமைந்தது.

அவர் விரைவில் நாட்டார் பாடல்கள் மீது ஓர் மோகத்தை வளர்த்தார். வாங் ஏராளமான சிறந்த சிறுபான்மை இனப் பாடல்களை சேகரித்து, திருத்தி எழுதினார். அவை உனது முகத்திரையை உயர்த்து, இளமை நடனம், நாள் நாளை வரை உனக்காக காத்து இருக்கிறேன். போன்றவற்றை உள்ளடக்கி இருந்தது. இந்தப் பாடல்கள் மிக அபூர்வமானதாகவும் மற்றும் செவிக்கினிய இசையைக் கொண்டதாகவும் உள்ளன.

வாங் அந்த தூரத்தில் போன்ற செவ்வியப்பாடல் உள்ளிட்ட பல நாட்டார் பாடல்களையும் தழிவி எழுதினார். இந்த பாடல் கஸாக் இன மக்களின் வெள்ளை நெற்றி பாடலின் தழுவலாகும். இந்தப் பாடல் முதலில் ஹன்சு மற்றும் ச்சிங்கையில் கேட்கப்பட்டதுடன் நீண்ட காலத்துக்கு முன்னர் முழு நாட்டிலும் பிரபலமாக இருந்து வந்தது. இந்தப் பாடல் பல தசாப்தங்களாக பாமர மக்களால் விரும்பப்படுகின்றன.

[மகிழுங்கள்]: 《இளமை நடனம்》

1 2 3 4 5 6 7 8 9 10 11 12
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040