ச்சியௌ யு
ச்சியௌ யு ஒரு புகழ்மிக்க சீனப் பாடலாசிரியர். இவர் ஷன்தொங் மாகாணத்தில் உள்ள ஜினிங் என்ற நகரில் 1927இல் பிறந்தார். அவர் சீனப் பாடலாசிரியர் வட்டாரத்தில் ஒரு வித்தகராகக் கருதப்படுகின்றார்.
1946இல் இவர் வடக்கு பல்கலைக்கழகத்தின் கலைக் கல்லூரியில் படிக்கத் தொடங்கினார். 1949இல் நவ சீனா உதயமானதும் இவர் சீனாவின் மத்திய நாடக கழகம், சீன நாடக ஆசிரியர்கள் சங்கம் மற்றும் கலாச்சார அமைச்சின் நாடக எழுத்து துறை போன்றவற்றின் ஒரு உறுப்பினராக இருந்து இருக்கிறார்.
1977க்குப் பின்னர் இவர் சீனப் பாடல் மற்றும் நாடக அரங்கின் துணைத் தலைவர் மற்றும் தலைவர், சீன இசை மற்றும் இலக்கிய கழகத்தின் நெறியாளர், சீனக் கலாச்சார தொடர்பு சர்வதேச நிலைய இயக்குனர் மற்றும் சீன மக்கள் தேசிய பேரவையின் எட்டாவது அமர்வு சபையின் உறுப்பினர் போன்ற பொறுப்புக்களை வெற்றிகரமாக நிறைவேற்றினார்.
ச்சியௌவின் எழுத்து காலத்திற்கு ஏற்றதாக இருந்தது. 1950களில் இவர் பெரியளவில் அறியப்பட்ட படைப்புக்களான திரைக் கதைகளில் மூன்றாவது லியு சகோதரி, சிவப்பு குழந்தை மற்றும் எனது தாய் நாட்டுப் பாடல்கள், Peony பாடல், துடுப்புக்களை இழுப்போமா போன்றவற்றை எழுதினார். 1980களில் சீனாவின் சீர்திருத்தம் மற்றும் திறப்பு கொள்கை போன்றவை மேற்கொள்ளப்பட்ட பின்னர் ச்சிசௌ பாடல்களில் மறக்க முடியாத இன்றைய இரவு, உனது இழுப்பு, சூரிய மறைவின் சிவப்பு, சீனாவின் புகழ்ச்சி போன்றன புதிய காலப்பகுதியில் சீன மக்களின் இதயத்தை வெளிப்படுத்தியது. எனவே அவருடைய சாதனைகள் பெரிதாகப் பரந்து விரும்பப்பட்டு பிரசித்தி பெற்று வந்தது.
ச்சியௌவின் சிறப்பான படைப்புக்களாக ஷன்சி அழகான இயற்கைக் காட்சிகளைக் கொண்டிருக்கின்றது என்பதை சொல்லுகின்ற என் தாய்நாடு, துடுப்புக்களை இழுப்போமா? இதயத்தின் எழுச்சி, மறக்க முடியாத இன்றைய இரவு, எங்கள் சீனாவை நேசியுங்கள் போன்றவற்றைக் குறிப்பிடலாம்.
[மகிழுங்கள்]: 《எங்கள் சீனாவை நேசியுங்கள்》
1 2 3 4 5 6 7 8 9 10 11 12