யன் வெய்வென்
யன் வெய்வென் பொதுத் துறை பாடல் மற்றும் நடனக் குழுவில் இளம் இசைப் பாடகராகவும் சீன இசைவாணர் சங்கத்தின் உறுப்பினராகவும் இருக்கின்றார்.
யன் வெய்வென், பேராசிரியர் ச்சாங் டியவினிடம் கற்றார். இவருடைய குரல் தெளிவானதாகவும் இனிமையானதாகவும் இருப்பதுடன், இவரின் இசை வீச்சும் பரந்ததாக இருக்கிறது. இவர் நவீன இசைத் துறையில் ஒரு குறிப்பிடத்தக்க இடத்தைப் பெற்று, ரசிகர்களால் விரும்பப்படுகிறார். இவருடைய "சிறிய போர்வை" பெரியவர்களுக்கு விடை கொடுத்தல், "ஒன்று, இரண்டு, மூன்று, நான்கு" போன்ற பாடல்கள் இராணுவம் மற்றும் சாதாரண மக்களிடையே மிகவும் பிரபலமடைந்துள்ளன.
இவ்வாறான பாடல்களுக்கு மேலாக, யன் வெய்வென் தன்னுடைய சொந்த ஆல்பங்களைப் பதிவு செய்ததுடன், "கோ லன்ஜிங்", "கடைசி பேரரசர்" போன்ற தொலைக்காட்சித் தொடர்களுக்கான கதைக்கருப் பாடல்களையும் பாடினார்.
இவர் சீனாவின் சார்பில் அமெரிக்கா, ஜப்பான், கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி போன்ற நாடுகளுக்குச் சென்றார். இவர் ரசிகர்களின் வரவேற்பையும் பாராட்டையும் பெற்றார்.
யன் வெய்வென், மூன்றாவது தேசிய இனம் பாடகர் போட்டியில் முதல் பரிசு, 1992இல் கோல்டன் ஆல்பம், 1993 மற்றும் 1995இல் ரசிகர்களின் மிகப் பிரியமான பாடகர்கள் போட்டியில் முதல் பரிசு உள்ளிட்ட பல பரிசுகளை தேசிய குரலிசைப் போட்டிகளில் பெற்றார்.
[மகிழ்வதற்கான தொகுப்பு]: 《சிறிய போர்வை》
1 2 3 4 5 6 7 8 9 10 11