• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
[பாடகர்கள்]

லியஓ சங்யொங்

லியஓ சங்யொங் இன்றைய உலக இசை நாடக மேடையில் சிறந்த சீனப் பாடகர்களில் ஒருவர்.

லியஓ சங்யொங், பிரபல குரலிசை ஆசிரியர் சோ சியாயனிடமிருந்தும், இசைப் பாடகர் லொ வெய்யிடமிருந்தும் பாடுவதற்குக் கற்றார். 1996 முதல் 1997 வரை இவர் 41வது பிரெஞ்சு சர்வதேச டவ்லூசு பாடல் போட்டி பிளாசிடோ டோமிங்கோ உலக இசை நாடகப் போட்டி மற்றும் சர்வதேச இசை உலகத்திற்கு அதிர்ச்சியளித்த அரசி சன்யோ சங்கீதப் போட்டி போன்றவற்றில் முதல் பரிசு வென்றார். பிளாசிடோ டோமிங்கோ உலக இசை நாடகப் போட்டியில் வியஓ சங்யொங் முதல் பரிசு வென்ற முதல் ஆசிய பாடகராக வந்தார். பிளாசிடோ டோமிங்கோ இவரைப் புகழ்ந்து "உச்சத்திற்கும் மத்திமத்திற்கும் இடைப்பட்ட வீச்சுள்ள இவருடைய குரல் மிகவும் அபூர்வமானது" எனக் கூறினர்.

அண்மைக் காலத்தில் லியஓ சங்யொங் அமெரிக்கா, பிரான்ஸ், ஜப்பான், ஆஸ்ட்ரேலியா, பிரிட்டன், சுவீடன், நார்வே, ஜெர்மனி, ரஷியா போன்ற பல நாடுகளுக்கும் வட்டாரங்களுக்கும் சென்றார். லியஓ சங்யொங் பிளாசிடோ டோமிங்கோவுடன் சேர்ந்து கென்னடி மையத்தில் வெர்டியின் இசை நாடகமான "ட்ரோவட்டோர்" நடித்தார். வாஷிங்டனில் அரங்கேறிய முதல் சீனப் பாடகர் என்ற புகழ் பெற்றார். உலகின் பல சிறந்த பாடகர்களிடையே சீனாவில் இருந்து வந்த லியஓ சங்யொங் மிகப் பிரகாசமான நட்சத்திரங்களில் ஒன்றாக இருக்கிறார் என வாஷிங்டன் போஸ்ட் குறிப்பிட்டது. இவர் வெர்டியின் இசை நாடகத்தைப் புரிந்து கொள்கின்றார். வெர்டியின் இசை நாடகத்தைப் பாடுவதற்காகவே இவர் பிறந்துள்ளார் என்பதைக் காட்டுகின்றது. இவருடைய அபாரமான நிகழ்ச்சியால், கென்னடி மையத்தில் ரசிகர்கள் இருக்கையை விட்டு எழுந்து நின்று ஆர்ப்பரித்தனர். இந்தத் திறமையுடைய பாடகர் இசை உலகத்திற்கு ஒருவரப் பிரசாதமாக வருவார் என நாம் திடமாக நம்புவோம்.

1998 தொடக்கத்தில், லியஓ சங்யொங், பிளாசிடோ டோமிங்கோவின் சார்பில் டோக்கியோவில் நடைபெற்ற ஒரு புது வருட நிகழ்ச்சியில் பங்கு கொள்வதற்கு அழைக்கப்பட்டார். அதே வருடம், இவர் சங்காய் இசை நாடகத்தை நிறுவுவதற்காக ஒரு விசேட கச்சேரியை நடத்துவதற்கு ஜோஸ் கர்கிராஸுடன் ஒத்துழைத்தார்.

பின்னர், லியஓ சங்யொங் மீண்டும் ரசிகர்களை வெற்றி கொண்ட மரியா ஸ்டூவர்டா நிகழ்ச்சியை கார்னிஜி மண்டபத்தில் நிகழ்த்தினார். லியஓ அண்மைய வருடங்களில் தொடர்ந்து வெற்றியடைந்த நேர்த்தியான உச்ச குரலிசைக் கலைஞராக இருந்தார் என நியூயார்க் டைம்ஸ் இவரைப் புகழ்ந்தது.

பிளாசிடோ டோமிங்கோவின் மகுந்த மதிப்பைப் பெற்ற மாணவனாக, லியஓ சங்யொங் இருந்ததனால் தனது ஆசிரியரின் அழைப்பின் பேரில் உலகம் முழுவதும் நிகழ்ச்சிகள் செய்தார். 2001இல் இவர் மீண்டும் பிளாசிடோ டோமிங்கோவுடன் Offenbachஇன் "Hoffman கதை" நிகழ்த்துவதற்குக் கூட்டுச் சேர்ந்தார்.

தற்போது வியஓ சங்யொங், சங்காய் இசைப் பாதுகாப்பு மையத்தில் ஆசிரியராகவும் குரலிசைத்துறையின் தலைவராகவும் இறுக்கின்றார்.

[மகிழ்வதற்கான தொகுப்பு]: 《சுறுசுறுப்பான மக்களுக்கு தயவுடன் வழி விடு.》

1 2 3 4 5 6 7 8 9 10 11
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040