• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
[பாடகர்கள்]

ஜியாங் தாவெய்

ஜியாங் தாவெய் 1947இல் சீனாவில் தியன்ஜின்னில் பிறந்தார். இவர் குழந்தைப் பருவத்தில் இருந்து இசையையும் ஓவியத்தையும் விரும்பினார். 1968இல் இவர் ஹொஹாட்டுக்குச் சென்று நிகழ்ச்சி தயாரிப்புக் குழுவின் ஒரு உறுப்பினராக சேர்ந்தார். பின்பு இவர் 1968இல் வனக் காவல் கலை கலைத் துறையில் சேர்ந்தார்.

1975இல் இவர் பெய்ஜிங் மத்திய தேசிய பாடல் மற்றும் நடனக் குழுவுக்கு ஒரு தனிக்குரலிசைக் கலைஞராக மாற்றப்பட்டார். இந்தக் காலப் பகுதியில் இவர் மத்திய தேசிய பாடல் மற்றும் நடனக் குழுவின் தலைவர், சீன மெல்லிசைக் குழுவின் தலைவர் போன்ற பதவிகளை வகித்தார். ஜியாங் தாவெய் சீனாவில் ஒரு புகழ்மிக்க tenor பாடகராக இருக்கிறார். இவருடைய கணீரென்ற குரலில் உணர்வலைகள் வளப்பூர்வமாக வெளிப்பட்டன.

இவர் பல வருடங்களாக பல ஆயிரம் பாடல்களை பல நூற்றுக்கணக்கான திரைப்படக் கதைகள் மற்றும் தொலைக்காட்சித் தொடர்களில் பாடியிருக்கிறார். இவை "மேற்கு நோக்கிய பயணம்" "குதிரைப் பாடல்" "பீச் மலர்கள் முழுமையாக மலர்ந்த இடம்" மற்றும் இவை போன்ற படைப்புக்களைப் படைத்துள்ளார். இந்தப் பாடல்கள் சீனா முழுவதும் பரவியிருக்கின்றன.

ஜியாங் தாவெய் அமெரிக்கா, கனடா, ஜப்பான், ஜெர்மனி, சிங்கப்பூர் மற்றும் தாய்லாந்து போன்ற பல நாடுகளில் இசை கச்சேரிகளை நடத்துவதற்கு சென்றுள்ளார்.

ஜியாங் தாவெய்யின் பெயரைக் குறித்து நிற்கின்ற இசை வேலைகளாக "மேற்கு நோக்கி பயண்", "குதிரை பாடல்" மற்றும் "பீச் மலர்கள் முழுமையாக மலர்ந்த இடம்" போன்றவை இவருடைய சிறந்த பாடல்கள்.

[மிகழ்வதற்கான பாடல்]: 《பீர் மலர்கள் முழுமையாக மலர்ந்த இடம்》

1 2 3 4 5 6 7 8 9 10 11
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040