செங் ஜி
செங் ஜி ஒரு புகழ்மிக்க சீனப் பாடகர். இவர் சீன இசைவாணர்கள் சங்கத்தின் ஒரு உறுப்பினர். சீன மக்கள் விடுதலை இராணுவப் பொது அரசியல் துறை பாடல் மற்றும் ஆடல் குழுவில் ஒரு நடிகர். 1946இல் பிறந்த இவர், 1962இல் சீன மக்கள் விடுதலை இராணுவத்தில் இணைந்து 1965இல் பொது அரசியல் துறை ஆடல் மற்றும் பாடல் குழுவில் சேர்ந்தார். இவர் 1983இல் சீன இசைப் பாதுகாப்பு மையத்தில் இசை நாடகத்தைப் பிரதான பாடமாகக் கொண்டு பட்டதாரியானார். இவர் புகழ் பெற்ற சீன குரலிசை ஆசிரியரான பேராசிரியர் சென் சியாங்கிடம் கல்லி கற்றார்.
செங் ஜினுடைய உச்சரிப்பு தெளிவானது. இவருடைய குரல் கேட்பதற்கு இனிமையானது. இவருடைய உயர் சுருதியானது பொலிவானதும் அற்புதமானதாகவும் இருக்கிறது. இவர் பாரம்பரிய இத்தாலிய ஓசை நயப்பாடலை இலகுவாகப் பாடுகிறார். இவர் இவருடைய சத்தத்தையும் தொனியையும் ஐயும் கட்டுப்படுத்தலாம். இவர் உயந்த புகழைக் கொண்டிருக்கிறார்.
இவர் ஷி குவாங்னன்னின் படைப்பான "இறந்தவர் மீது துக்கப்படு" என்பதில் கதாநாயகனாக நடித்துள்ளார். இதன் மத்தியிலும் செங் ஜி பல முழு நீள இசை நாடகங்களில் பிரதான பாத்திரமாகப் பங்குபற்றியுள்ளார். இது சீனர்களாலும் வெளிநாட்டவர்களாலும் போற்றப்பட்டது.
உலகத்தில் முதல் நிலைப்பத்து உச்ச குரலிசைகளில் ஒருவரான அமெரிக்க நியூயார்க் இசை நாடகத் தலைவரான பெவரி பெச்சி, அரியதொரு உச்ச குரலிசைக் கலைஞர் என்று செங் ஜியை போற்றிப் புகழ்ந்தார். புகழ் பெற்ற பாடகரான னோ பெச்சி "மிகவும் அபூர்வமான உச்சகுரல் இவருடையது" எனக் கூறுகிறார். மேலும் நியூயார்க் டைம்ஸ் இவரை அண்மை ஆண்டுகளில் கேட்கின்ற இளமையானதும் தெளிவானது மான குரல் எனக் குறிப்பிடுகின்றது.
அண்மை ஆண்டுகளில் செங் ஜி பல நாடுகளுக்கும் வட்டாரங்களுக்கும் பயணம் செய்து ஷங்ஹாய், குவாங் ஜோஉ, சென்ஜென் மற்றும் ஹாங்காங் போன்றவற்றில் தனிக்கச்சேரிகளை நடத்தினார்.
[மகிழ்வதற்கான தொகுப்பு]: 《எனது சூரியன்》
1 2 3 4 5 6 7 8 9 10 11