|
![]() |
கோ லான்யிங்
கோ லான்யிங் புகழ்பெற்ற உச்ச குரலிசைப் பாடகர். இப்பெண்மணி 1930ஆம் ஆண்டு டிசம்பரில் ஷான்சி மாநிலத்தில் ஒரு ஏழை குடும்பத்தில் பிறந்தார். இவர் 6 வயதான போது ஷான்சி பௌசியில் பாரம்பரிய உள்ளூர் இசை நாடகத்தை கற்கத் தொடங்கினார். ஒரு வருடத்திற்கு பின், இவர் ஷான்சி மாநிலத்தில் தையுவனில் முதல் முறையாக மேடை ஏறினார். இவர் பதினொரு வயதான போது தையுவனில் நாடகக் குழுவடன் சேர்ந்து நிகழ்ச்சிகளை வழங்கத் தொடங்கினார்.
1946இல் இவர் நாடகக் குழுவை விட்டு விலகி, வட சீன ஐக்கியப் பல்கலைக்கழகத்தில் பாட்டு மற்றும் நடனக் குழுவில் சேர்ந்தார். அன்றில் இருந்து இவர் தன்னுடைய புதிய இசைநாடகத் தொழிலை ஆரம்பித்தார்.
1947இல் கோ லான்யிங் வட சீன ஐக்கியப் பல்கலைக்கழகத்தில் சேர்ந்து, இசை நாடகத்தை கற்றுத் தேர்ந்தார். பின்னர், இவர் வட சீனப் பல்கலைக்கழகத்தின் பாடல் மற்றும் நடனக் குழுவுக்கு மாற்றப்பட்டார். இவர் சாதாரண மக்கள் மத்தியல் மிகவும் பிரபலமான பல பாடல் மற்றும் நடன நாடகங்களை நடித்தார்.
நவ சீனாவின் தோற்றத்திற்குப் பின்னர், கோ லான்யிங் சீனப் பாதுகாப்பு மையத்துடன் இணைக்கப்பட்ட பாடல் மற்றும் நடன அரங்கம், மத்திய இசை நாடக ஆராய்ச்சியகம், மற்றும் சீன இசை நாடக இல்லம் போன்றவற்றுக்கு பிரதான நடிகராக வந்தார். இவர் சாதாரண மக்களிடையே மிகவும் பிரபலம் பெர்று இருந்த ஒரு தெளிவான கலை பிரதிமைத் தொடர்களை உருவாக்கியதுடன் பல புதிய இசை நாடகங்களில் பிரதான பாத்திரத்தில் நடித்தார். இவர் சீனக் கலைத் தூதுவராக சோவியத் யூனியன், ரூமேனியா, போலந்து, செக்கோசிலோவேக்கியா, யுகோசிலேவியா, இத்தாலி, ஜப்பான் போன்ற பல நாடுகளுக்குச் சென்றார். இவர் கலாச்சாரத் தொடர்புக்கு பெரும் பங்களிப்புச் செய்தார்.
கோ லான்யிங் 1982இல் இருந்து நடிப்பதை நிறுத்தி விட்டார். பின்னர் சீன இசைப் பாதுகாப்பு மையத்தில் கற்பித்தார். 1986இல் கோ லான்யிங் என்ற கலைப் பள்ளியை குவாங் தொங்கில் தொடங்கினார்.
கோ லான்யிங் குரல் மிக இனிமையானது. இவருடைய இசை வீச்சு மிகவும் விரிவானது. இவருடைய உச்சரிப்பு தெளிவானது. ஏனென்றால் இவர் தன்னுடைய இளமைக் காலத்தில் கடுமையான பயிற்சிகளை எடுத்ததோடு இவர் கலையில் ஓர் சிறந்த தளத்தை கொண்டிருந்தார். இவர் நடித்த கதா பாத்திரங்களில் நடிப்பு திறனும், பாட்டுத் திறனும் சேர்ந்து வெளிப்பட்டன.
இது சீனப் புதிய இசை நாடக நடிப்புக் கலைக்கு புத்துயிரூட்டியது.
[மகிழ்வதற்கான தொகுப்பு]: 《எனது தாய்நாடு》
|