• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
[பாடகர்கள்]

லு ஜிஹொங்

லு ஜிஹொங் 1982இல் சியான் இசை பாதுகாப்பு மையத்தில் குரலிசை கற்றுத் தேர்ந்தார். பேராசிரியர் தௌ லிலிங்கிடம் கற்று பட்டதாரியானார். அதன் பின்னர் இவர் லான் சோ சாதாரண வீசேட பயிற்சிப் பள்ளியில் கற்பித்தார். 1985ல் இவர் கன்சு பாடல் மற்றும் நடனக் குழுவிற்கு மாற்றப்பட்டார். 1989ல் கடற்படை பொது பாடல் மற்றும் நடனக் குழுவில் ஒரு தனிப் பாடகராகப் புகுந்து பேராசிரியர் ஜின் தியெலினிடம் கற்றார்.

கன்சு வாய்ப்பாட்டுப் போட்டியில் மூன்று தடவைகள் லு ஜிஹொங் முதல் பரிசைப் பெற்றதுடன் தேசிய பாட்டுப் போட்டியில் வெள்ளி பதக்கம் வென்றார். 1992இல், சிசிடிவி நடத்திய தேசிய இளைஞர் பாட்டுப் போட்டியில் பங்கு பெற்ற இவர் இரண்டாவது பரிசைப் பெற்றார். அதே வருடத்தில் இவர் மக்கள் சீனக் குடியரசின் கலாச்சார அமைச்சு நடத்திய சீனத் தேசிய குரலிடைப் போட்டியில் முதல் பரிசு பெற்றார்.

இவ்வாறான பரிசில்களுக்கு மத்தியல் லு ஜிஹொங், மூன்று தேசங்கள் போன்ற பல பாடல்களை தொலைக் காட்சித் தொடர்களுக்காகப் பதிவு செய்தார். இவர் பாடுவது உணர்ச்சிமிக்கதாகவும் மனதைத் தொடுவதாகவும் இருந்தது. இவரால் நாட்டார் பாடல்களை வேறுபட்ட விதங்களில் கையாள முடிகிறது. மேலும் இவருடைய தோற்றம் சுதந்திரமானதாகவும் நேர்தியானதாகவும் இருக்கிறது. இவர் CCTV மற்றும் ஏனைய டிவி நிலையங்கல் நடத்திய பல பிரமாண்டமான ஆடம்பரமான மாலைக் கலை விருந்துகளில் பங்கு பெற்றார்.

லு ஜிஹொங் சீனாவின் பிரதிநிதியாக ஜெர்மனி, இரசியா, தாய்லாந்து மற்றும் அமெரிக்கா போன்ற பல நாடுகளுக்குச் சென்றார். அங்கு இவர் ரசிகர்களால் வரவேற்கப்பட்டார்.

[மகிழ்வதற்கான் தொகுப்பு]: 《நாடு செழிப்படைகிறது. குடி மக்கள் பாதுகாப்பாக இருக்கிறார்கள்.》

1 2 3 4 5 6 7 8 9 10 11
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040