|
![]() |
யாங் ஹொங்ஜி
யாங் ஹொங்ஜி சீனாவின் பிரபலமான இசைப்பாடகர். இவர் சீன இசைவாணர் சங்கத்திலும், சீன நாடக ஆசிரியர் சங்கத்திலும் உறுப்பினர்.
யாங் ஹொங் ஜி 1941 பிப்ரவரியில் லியோனிங் மாநிலத்தின் டாலியன் நகரில் பிறந்தார். சிறு வயதில் இருந்தே பாடுவதில் நாட்டம் கொண்டார். இவர் 1959இல் டாலியன் பாடல் மற்றும் நடனக் குழுவில் சேர்ந்தார். அதன் பின்னப் பீஜிங் இசை நாடக பொதுப் பிரிவுக் குழுவில் சேர்ந்தார். இவருடைய குரலிசை ஆசிரியர் லி மெங்சியாங். பின்னர் இவர் யாங் ஹுவாதாங் என்பவரிடம் கற்றார். அதே நேரம் பேராசிரியர் ஷென் சியாங் வைரை வழிநடத்தினார்.
யாங் ஹொங்ஜி இசைப்பாதுகாப்பு மையத்தில் முறையான இசைக் கோட்பாட்டைக் கற்காத போதிலும், அதை மிக நன்றாக அறிந்து இருந்தார். பலவகையான கடினமான இசைத் தொகுப்புக்களை பாடும் ஒரு பாடகளுக்கு ஒரு பாடகராவது மிகவும் கடினமாக இருந்தது. தொடர்ச்சியாக அவருடைய இளம் வயதில் இவர் ஓர் பல்கலைக்கழகத்தில் குரலிசையை சிறப்பாகக் கொண்டு கற்கக் கூடிய இசைக் கோட்பாடுகள் எல்லாவற்றையும் இவர் தனது சொந்த முயற்சியில் கற்றார். இவருடைய அறிவு, இவருடைய சாதனையில் ஓர் தீர்க்கமான பங்கினை வகித்தது.
1979இல் ஜப்பானிய நடத்துனர் செய்ஜி ஓசவா சீனாவுக்கு வந்து மத்திய பிலார்மானிக் இசைக் குழுவுடன் பீதோவென் நம்பர் 9 இன்னிசையை பாடுவதற்கு ஒத்துழைப்பு வழங்கினார். யாங் ஹொங்ஜி சீனா முழுவதும் உள்ள பாடகர்களிடையே இருந்து தெரிவு செய்யப்பட்டார். இவருடைய பாடலை செய்ஜி ஓசவா உயர்வாகப் போற்றினார். 1985இல் பேராசிரியர் சென் சியாங்கினுடைய பரிந்துரை காரணமாக இவர் செவ்விய ஆங்கிலத்தில், ஹைடனுடைய மகத்தான சிறந்த இசை படைப்பான "பருவங்கள்" என்ற பாடலை பாடுவதற்கு தெரிவு செய்யப்பட்டார். நடத்துனர் மோ யொங்சி மற்றும் ஹாங்காங் உரைக் கலை சங்கத்துடனும் கூட்டுறவை ஏற்படுத்தினார். பின்னர் மத்திய பிலார்மானிக் இசைக் குழுவின் ஒத்துழைப்புடன் இவர் வேர்டியின் "ஆத்மசாத்தி", ஹைடனுடைய "சிருஷ்டி", மொஸார்ட்டின் "பிரார்த்தனை" மற்றும் பீதொவென்னின் "மிஸ்ஸா சோலம்னிஸ்" போன்றவற்றை தனிப்பாட்டாகப் பாடினார். இவர் "கார்மென்", "அம்மணி வண்ணத்துப்பூச்சி" மற்றும் "தொஸ்கா" போன்ற சில இசை நாடகங்களில் முக்கியமான பாத்திரத்தை வகித்தார். இவர் பெரிய வெற்றியைச் சம்பாதித்த ஷி குவாங்னானின் இசை நாடகமான "ச்சு யுவன்"இல் நடித்தார்.
யாங் கொங்ஜி சிசிடிவி அல்லது ஏனைய தொலைக்காட்சி நிலையங்களால் நடத்தப்பட்ட அற்புதமான இசைமாலை விருந்துகள் மற்றும் நடவடிக்கைகளில் எப்போதும் கலந்து கொண்டார். இவர் பல ரசிகர்களை உணர்ச்சிவசப்படுத்திய தொலைக்காட்சித் தொடர்களுக்காக பல பாடல்களை ஒளிப்பதிவு செய்தும் இறுக்கிறார்.
[மகிழ்வதற்கான தொகுப்பு]: 《பெரிய நதி கடலுக்கு உருண்டு ஒடுகிறது》
|