• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
[பாடகர்கள்]

கு சொன்ஹுவா

கு சொன்ஹுவா 1930ல் பீஜிங்கில் மஞ்சு குடும்பத்தில் பிறந்தார். "அறுவடைப் பாடல்" இவருக்கு புகழ்தேடிக் கொடுத்ததுடன் 1952 இலிருந்து இவர் மத்திய தேசிய பாடல் மறறும் நடனக் குழுவில் செயல்படத் தொடங்கினார்.

நீண்ட காலத்திற்கு முன்னர், கு சொன்ஹுவா சீன சிறுபான்மை இன மக்களின் இசையில் பெரும் ஆர்வத்தைக் காட்டினார்.

1952இல் "கிழக்கு சிவக்கிறது" என்ற தலைப்பிலான ஒரு பிரமாண்ட இசை மற்றும் நடன காவியத்துக்கு ஒரு மங்கோலிய பேச்சுவழக்கமுள்ளவர் தேவைப்பட்டதால் அந்த வேலை மங்கோலியாவுடன் தொடர்புள்ள கு சொன்ஹுவாவிடம் ஒப்படைக்கப்பட்டது. அந்த புல்வெளியில் தன்னுடைய நேசிக்கப்பட்ட வாழ்க்கையை ஞாபகப்படுத்திக் கொண்ட கு சொன்ஹுவா, மங்கோலியர்களின் உணர்வுகளை வெளிப்படுத்துவதற்குரிய வகையை சேர்ப்பதற்குத் தீர்மானித்தார். இதன் தொடர்ச்சியாக இவர் ஆயிரக்கணக்கான ரசிகர்களின் உள்ளத்தில் கடுமையான உணர்வுகளை அதிகரித்த "புகழ்ச்சிப்பாடலை" பாடினார். இப்பாடல் அதிக பிரபலமாகி, கு சொன்ஹுவாவின் புகழ் கூறும் படைப்பானது. பின்னர் கு சொன்ஹுவா "ஆயிகுலி" எனும் ஒரு இசை நாடகத்தில் கதாநாயகனாக நடித்ததுடன் இது "அஷிமா" என்ற சீன முதல் இசை கதைப்படத்தில் முழுக் கதாநாயக பகுதிகளும் பதியப்பட்டது. மேலும் இவர் புகழ் பெற்ற இசைவாணரான ஷி குவாங்னானினுடைய உயர்ந்த இசைப் படைப்பான "அதியற்புத மரகதம்" என்ற படத்தின் கதாநாயகப் பகுதியைப் பதிவு செய்தார். இதற்கு மேலதிகமாக இவர் "லெய் பெங்" மற்றும் "தாய் நாடு" போன்ற ஏறத்தாழ 30 படங்களுக்காகப் பாடியுள்ளார்.

1992ல் கு சொன்ஹுவா, 12 அங்கங்களை உள்ளடக்கிய ஒரு இசைக் கலைப்படத்தை தனது சொந்தச் செலவில் படம் பிடிப்பதற்கு ஒரு தயாரிப்புப் பிரிவை அமைத்தார். இவர் பிரதம மேற்பார்வையாளராகவும் பிரதம இயக்குனராகவும் இருந்ததுடன் பிரதான நாட்டியமாகும் பாத்திரத்தையும் ஏற்றார். இவரின் மனைவி ஜாங் மன்து, பிரதம திட்டமிடலாளராகவும் பிரதம தயாரிப்பாளராகவும் பொறுப்பில் இருந்தார். இந்தத் திரைப்படமானது சீனச் சிறுபான்மை இனங்களின் சிறந்த பாரம்பரியக்கலையை பிரதிபலிப்பதுடன் ஒரு பெருந்தொகையான பார்வையாளர்களால் ரசிக்கப்பட்டது.

கு சொங்ஹுவா பல வருடங்களாக நாற்பதுக்கும் மேற்பட்ட இனங்களின் நாட்டார் பாடல்கள் மற்றும் நலிந்து போகும் கலைகளையும் சேகரித்தார். இவர் படிப்படியாக தனது சொந்தப் பாணியை உருவாக்கினார்.

கு சொங்ஹுவாவின் பெயர் சொல்லும் படைப்புக்களாவன புகழ்ச்சிப்பாடல், மூழ்குவதும் பாப்பி மலர்களும்.

[மகிழ்வதற்கான தொகுப்பு]: 《புகழ்ச்சிப்பாடல்》


1 2 3 4 5 6 7 8 9 10 11
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040