• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
[பாடகர்கள்]

ஊ பிசியா

ஊ பிசியா குனானில் தோன்றிய இன்னிசைப் பாடகர். இப்பெண்மணி 12 வயதாக இருந்த போது அதிகாரபூர்வமாக மேடையேறினார். இவர் சீன இசைப் பாதுகாப்பு மையத்தில் கல்விகற்ற போது, பல முறைமையான வாய்ப்பாட்டு பயிற்சிகளை எடுத்துக் கொண்டதுடன் பல வாய்ப்பாட்டுத் தொகுப்புக்களை கற்றுக் கொண்டு கூடுதலாக கடின உழைப்புடன் திறன் பெற்றார். இதன் விளைவாக இவர் நாட்டார் பாடல்களையும் மற்றும் வெளிநாட்டு நாட்டார் பாடல்களையும் முறைகளில் பாடுவதற்கு திறமை பெற்று இருந்தார்.

ஊ பிசியா சீன இசைவாணர் சங்கம் மற்றும் மக்கள் சீனக் குடியரசின் கலாச்சார அமைச்சு நடத்திய குரலிசைப் போட்டியில் வெள்ளிப் பதக்கம் பெற்றார். இவர் 1993 ஜுலையில் தனது சொந்த தொகுப்பை பதிவு செய்தார். பின்னர் இவர் 1996இல் தேசிய பாட்டுப் போட்டியில் முதல் பரிசு, சீனாவின் முதலாவது சர்வதேச வாய்ப்பாட்டுப் போட்டியில் முதலாம் பரிசு, ஸ்பெயினில் நடந்த 8வது பிக்பாஒ சர்வதேச வாய்ப்பாட்டுப் போட்டியில் முதல் பரிசு, மெனிஸ்கோ சர்வதேச வாய்ப்பாட்டுப் போட்டியில் இரண்டாம் பரிசு, சர்வதேச இசை உலகத்தில் ஒரு ஒலிம்பிக் போல் கருதப்படுகின்ற சைகோவ்ஸ்கை சர்வதேச இசைப் போட்டியில் இரண்டாம் பரிசு போன்ற ஏனைய பரிசில்களை வென்றார். இவருடைய மேடையேற்றங்கள் இவருடைய தேவதைக் குரலும் புன்னகையும் உலகில் சீனப் பாடகர்களின் தரத்தை மீண்டும் உயர்த்தியது.

2000ல் இருந்து ஊ பிசியா பெய்ஜிங், ஹுனான், சிங்கப்பூர் போன்றவற்றில் நடத்திய தனிப்பாட்டுக் கச்சேரிகள் பல ஆல்பங்களாக வெளியிடப்பட்டன. இவர் பிரபல தொகுப்பாளர்கள், நடத்துனர்கள் மற்றும் தொழில்சார் இசை நாடகக் குழுக்களுடன் கூட்டுறவை ஏற்படுத்தினார். இதைப் போன்று இவர் சர்வதேச வாய்ப்பாட்டுக் குழு மற்றும் ஸ்பெயின் தேசிய ஒலிபரப்பு நிலையத்தினால் மகா இன்னிசைக் குழுவில் பங்கேற்க அழைக்கப்பட்டார். 2001இல் சர்வதேச வாய்ப்பாட்டுக் குழுவும் 8 ஸ்பெயின் அர்ரியகா இசை நாடகக் குழு இவரை ரிகோலெட்டோ இசை நாடகத்தில் கதா நாயகியாக நடிப்பதற்கு அழைத்தது.

ஊ பிசியாவின் ஒவ்வொரு வெற்றிகரமான மேடையேற்றங்களும் உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் கவனத்தை ஈர்த்தன. சிரிடிவி அவருடைய பல நிகழ்ச்சிகளை விசேடமாக ஒளிபரப்பியது. ஸ்பானிஸ் பத்திரிகை இவரை "சொர்க்கக் குரல்" என அழைக்கிறது. இரசிய ஊடகங்கள் இவரை இதே போன்று "கீழை உலகின் குரலிசைத் தேவதை" எனக் கூறியது.

[மகிழ்வதற்கான தொகுப்பு]: 《இராப்பாடி》

1 2 3 4 5 6 7 8 9 10 11
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040