|
![]() |
சோ சியௌயன்
சோ சியௌயன் சீன சந்தப்பாடகர், குரலிசைக் கல்வியாளர் மற்றும் ஷாங்காய் இசை பாதுகாப்பு மையத்தின் வாழ்நால் பேராசிரியரும் ஆவார்.
அவர் 1918இல் ஹுபெய் மாநிலத்தில் உள்ள வுகான் நகரில் பிறந்தார். இப்பெண்மணியின் தகப்பனார் ஒர முற்போக்கு தொழில் முனைவானர். இசைப் பிரியர். தகப்பனாரின் செல்வாக்கின் காரணமாக சோ சியௌயன் குழந்தைப் பகுவத்தில் இருந்தே இசையில் ஆர்வம் கொண்டிருந்தார்.
1935இல் இந்த இசைப் பிரியர் சோ சியௌயன் ஷாங்காய் குஒலி தொழில்சார் பயிற்சி பள்ளியில் குரலிசையைச் சிறப்புப் பாடமாக எடுத்துக் கற்றார். எவ்வாராயினும் 1937இல் ஜப்பானுக்கு எதிரான போரின் காரணமாக இவர் பள்ளியை விட்டு வெளியேறி, சொந்த ஊருக்குத் திரும்ப வேண்டியிருந்தது.
1938இன் முடிவில் சோ சியௌயன் பாரிசுக்குச் சென்றார். அங்கு இவர் பிரபலமான இசை தொகுப்பாளர் ச்சி ஆர்பின்னை சந்தித்தார். அவருடைய உதவியுடன் சோ சியௌயன் பாரிஸ் இரசிய இசை மையத்தில் சேர்ந்தார். 1945 அக்டோபரில் ஏழு வருடக் கடுமையான உழைப்பின் பின்னர் சோ சியௌயன் இறுதியாக பாரிஸ் தேசிய இசை நாடக அரங்கில் இடம்பிடித்தார். இவருடைய முதலாவது அரங்கேற்றத்திலேயே இவருடைய சிறந்த திறன்னும் அழகான குரல் இசையும் பிரான்ஸ் ரசிகர்களை வெற்றி கொண்டது. பின்னர் சோ சியௌயன் பிராஹா வசந்தகால கச்சேரியில் பங்கு கொல்வதற்காக செக் நாட்டிற்கு அழைக்கப்பட்டார். அங்கு இவருடைய நிகழ்ச்சி வெற்றி பெற்று, சீனாவின் இன்னிசைக் குயில் என போற்றப்பட்டார்.
1947 அக்டோபரில் சோ சியௌயன் ஒன்பது ஆண்டுகளுக்கு முன் விட்டுப்பிரிந்த தமது தாய்நாட்டுக்கு பெரும் புகழுடன் திரும்பினார். அப்போது சீனா கோமிங்தாங் கட்சியின் கட்டுப்பாட்டின் கீழ், மக்கள் பலவாறாக துன்பப்பட்டனர். இந்த சூழ்நிலைகள் சோ சியௌயன்னுக்கு துயரத்தை ஏற்படுத்தியது. எனவே அவர் சீனா முழுவதும் சென்று, முற்போக்கு மாணவர்களிடையே பாடுவதென முடிவு செய்தார்.
நவ சீனாவின் உயதம் சோ சியௌயன்னுக்கு புதுவாழ்வைத் தந்தது. இவர் ஷாங்காய் இசைப் பாதுகாப்பு மையத்தில் குரலிசை ஆசிரியராக சேர்ந்தார்.
கலாச்சாரப் புரட்சி சோ சியௌயன் வாழ்க்கையில் ஒரு இருண்ட காலம். பாடவோ, கற்பிக்கவோ முடியவில்லை. ஆனால் பாடகராக வேண்டும் என்ற ஆர்வம் அவருக்கு ஆதரவு வழங்கியது. புகழ் பெற்ற tenor வெய் சொங் கலாச்சாரப் புரட்சியின் போது இவர் உருவாக்கிய சிறந்த மாணவராவார்.
கலாச்சாரப் புரட்சிக்குப் பின்னர் சோ சியௌயன் மீண்டும் மாணவர்களை உருவாக்க ஆரம்பித்தார். 1984ில் நடத்தப்பட்ட வியன்னா சர்வதேச குரல் இசை போட்டியில் சோ சியௌயன்னின் நான்கு மாணவர்கள் பரிசுகளைப் பெற்றனர். அவர்களில் மூவர் தங்கப் பதக்கங்கலையும் ஒருவர் வெள்ளிப் பதக்கமும் பெற்றனர். இந்த முடிவுகள் சர்வதேச இசைத் துறையை வியக்க வைத்தது.
சோ சியௌயன் சீன இசை நாடகத் தொழலை வளர்ப்பதற்கும், இசை நாடக நடிகர்களை உருவாக்கவும் மற்றும் சர்வதேச இசைக் கலாச்சாரம் மற்றும் தொடர்புகளின் ஒத்துழைப்புக்களைப் பலப்படுத்துவதற்குமாக 1988 மே மாதம் ஷாங்காய் இசைப் பாதுகாப்பு மையத்தில் சோ சியௌயன் இசை நாடக மையத்தை அமைத்தார். 1989இல் சோ சியௌயன் இசை நாடக மையம் ராகோலெட்டே என்ற இசை நாடகத்தை ஒத்திகை பார்ப்பதற்கு ஆரம்பித்தது. அந்த இசை நாடகம் பின்னர் பெரும் வெற்றி பெற்றது.
பேராசிரியர் சோ சியௌயன் 50 வருடங்களாக உள்நாட்டு மற்றும் கடல்கடந்த போட்டிகளில் பல பரிசில்களைப் பெற்ற பல பாடகர்களை உருவாக்கி இருக்கிறார். அவருடைய மாணவர்களில் பலர் பெருநகர இசை நாடகம் மற்றும் சன் பிரன்சிஸ்கோ இசை நாடகத்தில் இடம்பெற்று முக்கிய நடிகர்களானார்கள். அதே நேரத்தில் பேராசிரியர் சோ சியௌயன் பல சிறந்த இசை குரலிசை மாணவர்களை உருவாக்கியுள்ளார். அவர்களில் சிலர் கல்லூரிகளில் கற்பிப்பதோடு சிலர் வெளிநாட்டு இசை நாடகத்துறையில் ஆர்வமாக இருக்கிறார்கள், அல்லது பல்வேறு வகையான போட்டிகளில் பரிசில்களைப் பெற்றுள்ளனர். இவர்களில் லியௌ சங்யொங், ஜங் ஜியன்இ, ஹஒகுவா மற்றும் ஏனையவர்களைக் குறிப்பிடலாம்.
[கேட்டு மகிழத்தக்க பாடல்]:《நான் புல்வெளியைத் தாண்டுகிறேன். குதிரை சவாரி.》
|