சொங் சுயிங்
சொங் சுயிங் நவீன சீனாவில் மிகவும் திறமையான இளம் பாடகர்களில் ஒருவர்.
சொங் சுயிங் 1966 ஜுலை 27 இல் ஹுனான் மாநிலத்தில் ஒரு மியாஒ இனக் குடும்பத்தில் பிறந்தார். 1981 ஜுலையில் சொங் சுயிங் இடைநிலைப் பள்ளியில் படித்துப் பட்டதாரியானார். அதே ஆண்டில் இப்பெண்மணியின் பிறப்பிடத்தின் இசை நாடகக்குழுவானது புதிய நடிகர்களைச் சேர்த்தது. இவருடைய தகப்பனார் சிறிது காலத்துக்கு முன்னர் காலமானதால், துக்கத்துடன் தேர்வு மண்டபத்துக்குச் சென்றார். ஒரு மாதத்திற்கு பின்னர் இசை நாடக குழுவுக்குள் சேர்த்துக் கொள்ளப்பட்டார். பின்னர் இவர் துஜியா இனப் பாடல் மற்றும் இசைக் குழுவுக்கு மாற்றப்பட்டார். ஒரு வருடத்துக்குள் சொங் சுயிங் பாடல் மற்றும் ஆடலை சிறப்புப் பாடமாகக் கற்க மக்கள் மத்திய பல்கலைக்கழகத்தில் சேர்ந்தார். 1988இல் சாங்ஷாவில் நடைபெற்ற ஒரு போட்டியில் "என் அன்புக்குரியவரே அப்பால் செல்லாதே" என்ற ஒரு மியாஓ பாணி பாடலுக்கு தங்கப் பரிசை வென்றார். பின்னர் நடுவர்களில் ஒருவரும் புகழ்மிக்க இசை ஆசிரியருமான ஜின் தியேலின் இவரை தனது மாணவராக ஏற்றார். பின்பு இவர் சிசிடிவியின் வசந்த விழா இசை விருந்தில் இவருடைய பாடலான "சிறிய புறக் கூடை" என்ற பாடலை பாடி திடீரெனப் புகழ் பெற்றார். 1991இல் இவர் சீன மக்கள் விடுதலை இராணுவ கடற்படை அரசியல் துறையின் பாடல் மற்றும் ஆடல் குழுவுக்கு மாற்றப்பட்டார்.
சொங் சுயிங்கின் இசை வீச்சு மிகப் பரந்ததாகவும், இவருடைய குரல் இனிமையானதாகவும் இருக்கின்றது. இவர் ஓசை நயத்துடன் திறமையாகப் பாடுவதால் இவர் தனக்கே உரித்தான ஒரு பாடும் பாணியை உருவாக்கிக் கொண்டார்.
சொங் சுயிங்கின் சீனப் பாடல்கள் "ஸ்பைஸ்கில்ஸ்", "சிறிய புறக் கூடை", "நல்ல நாள்", "என் சீனாவை நேசி", "பிறக்கும் பாடல்கள்" "இராணுவ வீரர்கள்" மற்றும் "நான் வளர்ந்த பின்பு உன்னைப் போல இருப்பேன்" போன்றவற்றை உற்றடக்குகின்றன. இவை சீனாவிலும் உலகம் பூராகவும் மிகப் பிரபல மடைந்துள்ளன. இவருடைய இரசிகர்கள் எல்லா நாடுகளிலும், பெரிய நகரங்கள் தொடங்கி சிறிய கிராமங்கள் வரை இருக்கின்றனர்.
[மகிழ்வதற்கான தொகுப்பு]: 《நல்ல நாள்》
1 2 3 4 5 6 7 8 9 10 11