உலக அரசியல் துறையில் சீனாவின் முக்கிய பங்கு சொந்த வளர்ச்சி, வெளிநாடுகளுக்கான மதிப்பு, இணக்கமான உலகைக் கட்டியமைப்பதிலான பங்கு ஆகிய கருத்துகளுக்காக, சீனா சர்வதேசச் சமூகத்தின் பரந்த பாராட்டைப் பெற்றுள்ளது. நவ சீனா நிறுவப்பட்ட 60வது ஆண்டு நிறைவுக்கு முன், 64வது ஐ.நா பொதுப் பேரவையின் பொது விவாதக் கூட்டம், செப்டம்பர் 23 முதல் 29ம் நாள் வரை, நியூயார்கிலுள்ள ஐ.நாவின் தலைமையகத்தில் நடைபெற்றது. உலக அறைகூவல்களை பயனுள்ள முறையில் சமாளித்து, பல தரப்புவாதத்தையும் வேறுபட்ட நாகரிகங்களுக்கிடை பேச்சுவார்த்தையையும் வலுப்படுத்தி, சர்வதேச அமைதி, பாதுகாப்பு மற்றும் வளர்ச்சியை முன்னேற்றுவது, இவ்விவாதக் கூட்டத்தின் நோக்கமாகும்.
| சீன நிதிக் கொள்கையின் தொடர்ச்சி மற்றும் நிதானத் தன்மை சர்வதேச நிதி நெருக்கடி ஏற்பட்ட பிறகு, சீனா, ஆக்கப்பூர்வ நிதிக் கொள்கைகளை நடைமுறைப்படுத்தி வருகிறது. இதில், குறிப்பிடத்தக்க முன்னேற்றங்கள் காணப்பட்டுள்ளன. எதிர்காலத்தில் சீனா நிதிக் கொள்கையின் தொடர்ச்சி மற்றும் நிதானத் தன்மையைத் தொடர்ந்து நிலைநிறுத்தும் என்று அண்மையில் சீன நிதி அமைச்சர் Xie Xuren தெரிவித்தார்.
| |
|
|
சீனாவின் மென்மேலும் முக்கிய பங்கு இவ்வாண்டு நவ சீனா நிறுவப்பட்ட 60வது ஆண்டாகும். மேலும் சீனாவின் தூதாண்மை பணி துவங்கிய 60வது ஆண்டாகும். கடந்த 60 ஆண்டுகளில், சீனா பல்வேறு நாடுகளுடன் நெருக்கமான ஒத்துழைப்பு மேற்கொண்டு பொறுப்பான மனப்பான்மையுடன் பல்வகை சர்வதேசச் சர்ச்சைகளைத் தீர்க்க பங்காற்றியுள்ளது
| |
|