• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
சீனப் பண்பாடு:தேவதையின் திருமணம் என்ற குவாங்மெய் இசை நாடகம்
  2013-03-06 09:01:49  cri எழுத்தின் அளவு:  A A A   

அன்குவெய் மாநிலத்தின் ஹெ ஃபெய் மாநகரின் தொங் செங் சாலையில் அமைதியான தோட்டம் ஒன்று இருக்கிறது. இங்கே அன்குவெய் மாநிலத்தின் குவாங்மெய் இசை நாடக அரங்கு அமைந்துள்ளது. இந்த அரங்குதான் தேவதையின் திருமணம் என்ற குவாங்மெய் இசை நாடகத்தின் பிறப்பிடம் ஆகும். சுமார் 60 ஆண்டுகளுக்கு முன், குவாங்மெய் இசை நாடகக் கலைஞர்கள் இங்கேதான், தேவதையின் திருமணம் இசை நாடகத்தை அரங்கேற்றினர். 60 ஆண்டுகள் ஆகிவிட்டன. இந்த இசை நாடகம் பல இடங்களில் பரவி குவாங்மெய் இசை நாடகக் கலைக் குழுக்கள் அதிகமாக அரங்கேற்றும் இசை நாடகமாக மாறியுள்ளது.

அன்குவெய் மாநிலத்தின் குவாங்மெய் இசை நாடக அரங்கின் தலைவர் சியாங் சியன் கோ கடந்த நூற்றாண்டின் 80ஆம் ஆண்டுகளில் பட்டம் பெற்ற பிறகு, அப்போதைய அன்குவெய் மாநில குவாங்மெய் இசை நாடகக் குழுவில் சேர்ந்தார். கடந்த சில பத்தாண்டுகளில், அவர் நடிகராக குவாங்மெய் இசை நாடக அரங்கேற்றங்களில் பங்கெடுத்து வருகிறார்.

"குவாங்மெய் இசை நாடகக் கதைகளில், தேவதையின் திருமணம் மிகப் புகழ் பெற்றது. அன்குவெய் உள்ளிட்ட சீன பெருநிலப்பகுதியிலும், தென் கிழக்காசியாவிலுள்ள சீனர்களிடையிலும் தேவதையின் திருமணம் என்ற இசை நாடகம் பிரபலமாகி விட்டது" என்றார் அவர்.

1 2 3 4 5 6 7 8
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040