• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
சீனப் பண்பாடு:தேவதையின் திருமணம் என்ற குவாங்மெய் இசை நாடகம்
  2013-03-06 09:01:49  cri எழுத்தின் அளவு:  A A A   

1953ஆம் ஆண்டு, தேவதையின் திருமணம் என்ற இசை நாடகத்தை அன்குவெய் மாநிலத்தின் குவாங்மெய் இசை நாடக குழு, முதன்முறையாக அரங்கேற்றியது. 1954ஆம் ஆண்டு சீனாவின் கிழக்குப் பகுதி இசை நாடக அரங்கேற்ற விழாவில், இந்த இசை நாடகக் குழு, முதலாவது விருது பெற்றது. Qi Xian Nv என்ற தேவதை கதாப் பத்திரத்தை நடித்த Yan Feng Ying அம்மையாரும், துங் யூங் என்ற இளைஞர் கதாப் பத்திரத்தை நடித்த Wang Shao Fangகும் நடிகர் விருதுப் பெற்றனர்.

1955ஆம் ஆண்டு, ஷாங்காய் திரைப்பட தயாரிப்பு நிறுவனம், இந்த இசை நாடகத்தைத் திரைப்படமாக தயாரித்தது. அதிகமான சீன மக்கள் இத்திரைப்படத்தைக் கண்டு இரசித்தனர். அவர்கள் இத்திரைப்படத் கதையால் மிகவும் ஈர்க்கப்பட்டனர். Yan Feng Ying அம்மையார் மற்றும் Wang Shao Fangகின் தலைசிறந்த நடிப்பால் ஈர்க்கப்பட்டனர். சுதந்திரமான தூய்மையான காதல் மீதான மக்களின் ஆசையை தேவதையின் திருமணம் என்ற குவாங்மெய் இசை நாடகம் வெளிப்படுத்தியுள்ளது. இந்த இசை நாடகத்தின் காட்சிகள், நாட்டுப்புறத் தனிச்சிறப்புடையவை.

1 2 3 4 5 6 7 8
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040