மேற்கூறிய நிகழ்ச்சி நிரலுக்குப் பின், ஷிச்சின்பிங் உரை நிகழ்த்தினார். சீனத் தேசத்தின் மாபெரும் மறுமலர்ச்சி என்ற சீனாவின் கனவை நிறைவேற்ற வேண்டுமானால், நாட்டின் வளம் மற்றும் வலிமை, தேசத்தின் வளர்ச்சி, மக்களின் மகிழ்ச்சி ஆகியவற்றை நனவாக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.
சீன மக்கள் அமைதி நேசிப்பவராக இருக்கின்றனர். அமைதியான வளர்ச்சிப் பாதையில் சீனா உறுதியாக நடைபோட்டு, ஒன்றுக்கொன்று நலன் தந்து கூட்டாக வெற்றி பெறக் கூடிய திறப்பு கொள்கையைப் பின்பற்றும் என்று அவர் மீண்டும் உறுதிப்படுத்தினார்.