பி.ருசா
2005ஆம் ஆண்டு அக்டோபர் திங்கள் முதல் நாள், ஹாங்காங் வட தொலைக்காட்சிச் சேவை மூலம், சீன வானொலித் தமிழ்ப் பிரிவின் ஒலிபரப்பு ஹாங்காங் சிறப்பு நிர்வாகப் பிரதேசத்தில் பண்பலை சேவையைத் தொடங்கியது. 2009ஆம் ஆண்டு ஏப்ரல் திங்களில், அப்பண்பலை சேவை நிறுத்தப்பட்டது.
2010ஆம் ஆண்டு ஏப்ரல் திங்கள் 23ஆம் நாள், இலங்கைப் பண்பலை FM102 ஒலிபரப்பைத் தமிழ்ப் பிரிவு தொடங்கியது. 2012ஆம் ஆண்டு இறுதியில், அது FM97.9யாக மாறியது.
மேலும், சீன மொழியைக் கற்றுக்கொடுக்கும் நிகழ்ச்சிகளைத் தமிழ்ப் பிரிவு தயாரித்து வழங்கியது. தமிழ் மூலம் சீனம், அன்றாட சீனா மொழி ஆகிய இரண்டு நிகழ்ச்சிகளின் மூலம், சீன மொழியில் ஆர்வம் கொண்டுள்ள நேயர்கள் பலர் தொடர்ந்து சீன மொழியைப் படித்து வருகின்றனர்.
தமிழ்ப் பிரிவின் முன்னாள் தலைவர் தி. கலையரசி 2009ஆம் ஆண்டு சீன வானொலி முதன்மை அறிவிப்பாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அறிவிப்பாளர் என்ற பதவியில் இது மிக உயர்ந்த புகழ் வாய்ந்ததாகும்.
தற்போது தமிழ்ப் பிரிவின் அலுவலகத்தில் பணியாளர்களின் வயது சராசரியாக 28 ஆகும். இளம் ஆற்றல் மிக்க இந்தக் குடும்பத்துக்கு உயிராற்றல் மிக்க தலைவர் கலைமகளின் தலைமையில் தமிழ்ப் பிரிவு மென்மேலும் செழுமையாக வளர்க்கின்றது.