நேயர்களே, நீங்கள் கேட்டுக் கொண்டிருப்பது, "சீன-தெற்காசியா, அன்புள்ள அண்டை பிரதேசம்" எனும் பாடலாகும். இவ்வாண்டின் ஜூன் திங்கள் துவக்கத்தில் சீனாவின் குன் மிங் நகரில் நடைபெறும் முதலாவது சீன-தெற்காசிய பொருட்காட்சிக்காக பாகிஸ்தான் மூத்த இசைக் கலைஞர் ஹலித் அஸ்கார் சிறப்பாக இயற்றிய பாடல் இதுவாகும். மே திங்கள் 3ம் நாள் பிற்பகல் சீன வானொலி நிலையத்தில் நடைபெற்ற சீன-தெற்காசியப் பொருட்காட்சியின் தலைப்புப் பாடலின் தேர்வுப் போட்டியில், இந்த பாடல் மிக அதிக வாக்குகளைப் பெற்றுள்ளது. அதனோடு, தெற்காசிய நாடுகளின் பாடல்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் 9 பாடல்களும், பத்து தலைசிறந்த தலைப்பு பாடல்களின் பட்டியலில் சேர்ந்தன. சீனா மற்றும் பல்வேறு தெற்காசிய நாடுகளின் இசைத் தனிச்சிறப்புகள் சேர்க்கப்பட்டுள்ள இப்பாடல்கள், சொந்த நாடும் அமைதியும் மீது தெற்காசிய நாட்டு மக்களின் அன்பை வெளிப்படுத்தி, சீனாவுக்கும் தெற்காசிய நாடுகளுக்கிடை நட்புறவைப் பாராட்டுகிறன.