சீன-தெற்காசியப் பொருட்காட்சியின் தலைப்புப் பாடலின் தேர்வுப் போட்டியின் நடுவர் குழுவில் 11 பேர் இருக்கின்றனர். சீனாவுக்கான ஆப்கானிஸ்தான், வங்காளத் தேசம், இந்தியா, நேபாளம், பாகிஸ்தான், இலங்கை ஆகிய நாடுகளின் தூதாண்மை அலுவலர்களும், சீன மத்திய இசை கல்லூரியின் புகழ் பெற்ற பேராசிரியர்களும் அவர்களில் இடம்பெறுகின்றனர்.
குன் மிங் நகரின் சீனக் கம்யூனிஸ்ட் கட்சி குழுவின் பிரச்சாரப்பிரிவும், சீன வானொலி நிலையமும் இப்போட்டியைக் கூட்டாக நடத்தின.