• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
உணவு வரிமக் கருவி
  2014-01-17 13:17:52  cri எழுத்தின் அளவு:  A A A   

உணவை மருந்தாக சாப்பிட கற்றுக்கொள். இல்லாவிட்டால் மருந்தை உணவாக உட்கொள்ளும் நிலை ஏற்படலாம் என்ற சொல் வழக்கு உண்டு. நவீன தொழிற்நுட்பக் காலத்தில் நலவாழ்வு பற்றியும், உடல்நலத்திற்கு உகந்த உணவு சாப்பிடுவது பற்றியும் விழிப்புணர்வு அதிகரித்து வருகிறது. 19 வயதான ஒருவருக்கு ஒரு நாளைக்கு 2400 கலோரி ஆற்றல் தேவைப்படுகிறது. நாம் நாள்தோறும் உண்கின்ற உணவிலிருந்து தான் இந்த ஆற்றலை பெற்று வருகின்றோம். நாள்தோறும் மிகவும் அதிகமாக கலோரியுடைய உணவு வகைகளை உண்டு வந்தால், உடல் பருமன், இரத்த அழுத்தம் போன்ற பல்வேறு நோய்கள் நம்மை அண்டிவிடும் வாய்ப்புக்கள் அதிகம்.

இதனால், மக்கள் சாப்பிடுகின்ற உணவு வகைகளிலுள்ள கலோரியை அறிந்து உண்பது தற்போது அதிகரித்து வருகிறது. பொதுவாக, உணவகங்களில் விற்கப்படும் உணவுகளில் கலந்துள்ள பொருட்கள், கலோரிகளின் எண்ணிக்கை ஆகியவற்றை அதன் பொதியில் அச்சிட்டு விற்க வேண்டுமென்ற விதிமுறை சில நாடுகளில் ஏற்கெனவே வழக்கத்தில் உள்ளது. இத்தகைய செயல்பாட்டால் வெளியில் வாங்கி உண்ணும் உணவிலுள்ள கலோரி எண்ணிக்கையை அறிந்துக் கொள்ளலாம். ஆனால், வீடுகளில் உண்ணும் உணவிலுள்ள கலோரிகளை அறிந்து கொள்ளவதெப்படி?

அதற்கும் வழி பிறந்து விட்டது. உணவிலுள்ள கலோரி அளவை எளிதாக கண்டறிய கையடக்க ஸ்கேனர் அதாவது வரிமக் கருவி ஒன்றை ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். இந்த கருவியை ஸ்மார்ட் செல்லிடபேசிகளில் இணைத்து விட்டால், நாம் உட்கொள்ளும் உணவிலுள்ள ஒவ்வாமைப் பொருட்கள், வேதிப் பொருட்கள், ஊட்டச் சத்துக்கள், கலோரி அளவு ஆகியவற்றை தெளிவாக காட்டிவிடும்.

1 2 3
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040