• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
உணவு வரிமக் கருவி
  2014-01-17 13:17:52  cri எழுத்தின் அளவு:  A A A   

டொரண்டோவில் வடிவமைக்கப்பட்டுள்ள டெல்ஸ்பிக் (Tellspic) எனப்படும் இந்த வரிமக் கருவியை உணவுப் பொருட்களின் அருகில் காட்டினால், அதிலுள்ள ஒவ்வாமைப் பொருட்கள், வேதிப் பொருட்கள், ஊட்டசத்துக்கள் கலோரி எண்ணிக்கை அனைத்தையும் பிரித்து நமக்கு காட்டிவிடும். ஒரு கிராமுக்கு எவ்வளவு சர்க்கரை உள்ளது, கொழுப்பு உள்ளது என பலவித தகவல்களையும் தெரிவித்துவிடும் ஆற்றலும் உடையது.

ஜங்புட் எனப்படும் கொழுப்பு மற்றும் அதிக கலோரி அளவு கொண்ட உணவுகளை அல்லது தேவையற்ற உணவுப் பொருட்களை உண்ணாமல் இருக்க விரும்புவோர், தாங்கள் சாப்பிடுகின்ற உணவுப் பொருட்களை எளிதாக சோதனை செய்ய உதவும் வகையில் இந்த உணவு வரிமக் கருவியை உருவாக்கியுள்ளதாக இதனை வடிவமைத்தோர் தெரிவித்துள்ளனர். இன்று மின்னஞ்சல் பார்ப்பது எவ்வளவு எளிதாக உள்ளதோ, அவ்வளவு எளிதாக உணவிலுள்ள கலோரி அளவை அறிந்துக் கொள்ளும் வசதியை உருவாக்கிக் கொடுக்க இந்த ஆய்வாளர்கள் முயன்றுள்ளனர்.

சிறியதொரு இராமன் நிறமாலை தொழிற்நுட்பம், தனித்தமையான கிளட் எனப்படும் மேகக்கணிமை அடிப்படையிலான படிமுறை தீர்வு, எளியதொரு App எனப்படும் மென்ஒருங்கு ஆகியவற்றை பயன்படுத்தி, இந்த உணவு வரிமக் கருவி உணவிலுள்ள கலோரி அளவை சரியாக காட்டிவிடுகிறது.

இந்த கருவி உணவுப் பொருட்களின் முன்னால் காட்டப்பட்டவுடன் குறைந்த வீரியமுள்ள ஊடொளியை அவற்றின் மேல் அனுப்புகிறது. ஊடொளி உணவுப் பொருட்களின் மேல் பட்டு திரும்பிவரும் ஒளி அலைகளை வைத்து அதிலுள்ள கூறுகளை பிரித்தெடுக்கிறது. அந்த தரவுகள் அக்கருவியில் ஏற்கெனவே சேமிக்கப்பட்டிருக்கும் தரவுகளோடு ஒப்பிடப்பட்டு, முடிவுகள் பயன்பாட்டளரின் ஸ்மாட் செல்லிடபேசியில் வழங்கப்படுகின்றன.

1 2 3
உங்கள் கருத்தை பதிவு செய்ய
கடைசிச் செய்தி
• அபா நிலநடுக்கத்துக்கான மீட்புதவிப் பணி பற்றி ஷிச்சின்பிங் முக்கிய கட்டளை
• செங்து-காட்மாண்டு விமானப் பறத்தல் திறந்து வைக்கப்பட்டுள்ளது
• சீனாவின் அபாவில் நிலநடுக்கம் 9 உயிரிழப்பு
• கொரிய தீபகற்ப அணு ஆயுதப் பிரச்சினை பற்றிய வட கொரியாவின் கருத்து
• பிலிப்பைன்ஸ் அரசுத் தலைவருக்கான ஷி ச்சின்பிங்கின் வாழ்த்து செய்தி
• இந்தியா 319 முறை போர் நிறுத்து உடன்படிக்கையை அத்துமீறியது:பாகிஸ்தானின் குற்றச்சாட்டு
• சீன உள்மங்கோலிய தன்னாட்சிப் பிரதேசம் நிறுவப்பட்ட 70ஆம் ஆண்டு நிறைவு கொண்டாட்ட கண்காட்சி
• ஈரான்:கொரிய தீபகற்ப பிரச்சினையைப் பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க வேண்டும்
• திபெத்தில் கண்புறை நோயாளிகளுக்கு இலவச சிகிச்சை
• ஈரான் ஏவுகணைத் திட்டம் ஐ.நா 2231ஆம் தீர்மானத்தை மீறாது
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040