திபெத் தன்னாட்சிப் பிரதேசத்தில் லாசா நகரின் யாங் தா வட்டத்தில் திபெத் இனத்தைச் சேர்ந்த விவசாயி சி ரென் பிங் சோ என்பவர் வாழ்கிறார். முன்பு அவரது குடும்பம் பார்லி வளர்த்து, வறுமையில் வேதனைப்பட்டனர். தற்போது அவருக்கு 3 காய்கறி மற்றும் பழ வளர்ப்புக் கூடாரங்கள் உண்டு. ஆண்டுக்கு சுமார் 50ஆயிரம் யுவான் வருவாய் பெறுவார். வாழ்க்கை தரம் குறிப்பிட்ட அளவில் உயர்த்தப்பட்டுள்ளது. தற்போதைய நிலைமையை விட, கடந்த 30 ஆண்டுகளாக ஆண்டுதோறும் நிகர வருமானம் 1000யுவான் மட்டும் இருந்தது. தற்போது சிறப்பாக வாழ முடியும். என்ன சாப்பிட விரும்பினால், வாங்கிக் சாப்பிட என்று அவர் கூறினார்.
பெய்ஜிங் மாநகரின் உதவியாக கட்டியமைத்த நவீன வசதிகளுடைய வேளாண் முன்மாதிரி தோட்டம், சி ரென் பிங் சோவின் வாழ்க்கை தரம் உயர்வின் காரணமாகும். நீண்டகாலமாக, யாங் தா வட்டத்தில் விவசாயிகள் பார்லியைப் பயிரிட்டு, கடினமாக வாழந்தனர். 2010ஆம் ஆண்டு விவசாயிகளின் வருமானத்தை அதிகரிக்க, பெய்ஜிங் திபெத் உதவித் தலைமையகம், யாங் தா வட்டத்தில் 3கோடியே 46இலட்த்து 70 ஆயிரம் யுவானை ஒதுக்கீடு செய்து, 360 கூடாரங்களை நிறுவியுள்ளது. வறுமையிலிருந்து விடுவித்து செல்வம் பெற, விவசாயிகளை காய்கறி மற்றும் பழங்களை வளர்க்க ஊக்குவிக்கும் இந்தத் திட்டம் மூலம், யாங் தா வட்டத்தில் உள்ள 124 குடும்பங்களும் பயன் பெற்றுள்ளன. பயிரிடுதல் பற்றிய தொழில் நுட்பப் பயிற்சியை அவர்கள் இலவசமாக அடைந்தனர். அத்துடன் குறைந்த விலையிலும் கூடாரங்களை வாடகை எடுக்க முடியும். இந்த நிலையில் காய்கறி மற்றும் பழ வளர்ப்பு ஒத்துழைப்பு சங்கத்தை உருவாக்கி, சிறப்பான விற்பனை தொழில் நிறுவனங்களையும் விவசாயிகள் நிறுவியுள்ளனர். விவசாயி-பேரங்காடி, விவசாயி-பள்ளிகள் போன்ற விற்பனை முறைமையைச் செயல்படுத்தினர்.