தற்போது இந்த உதவித் தோட்டத்தில் தர்ப்பூசணிப் பழம், முலாம் பழம், பச்சை மிளகாய், தக்காளி, அவரை முதலிய சுமார் 30 வகை காய்கறிகள் வளர்க்கப்படுகின்றன. இவையெல்லாம் வேளாண் ஒத்துழைப்புச் சங்கத்தின் நிதியுடன் வாங்கி, ஒரே பயிரிடும் வரையறையில் வளர்த்து, சேர்ந்து விற்கப்படுகின்றனர். இதன் மூலம் வேளாண் உற்பத்தி பொருட்களின் தரம் சிறப்பாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. கடந்த 4 ஆண்டுகளாக, யாங் தா வட்டத்தில் ஆண்டுதோறும் மாசுபாடு இல்லாத காய்கறிகள் மற்றும் பழங்களின் எடை, 36 இலட்சம் கிலோகிராம் அதிகமாகும். ஓராண்டில் மொத்த உற்பத்தி மதிப்பு ஒரு கோடியே 50 இலட்சம் யுவானைத் தாண்டியது. ஒவ்வொரு குடும்பத்துக்கு நிகர வருமானம் 28ஆயிரம் யுவானாகும்.
யாங் தா வட்ட அரசின் வேளாண் சேவை மையத்தின் துணை இயக்குநர் ரென் பு ஜியுங் கூறுகையில், லாசா உள்ளூரில் காய்கறிகள் மற்றும் பழங்களின் வளர்ப்பு, தரத்திலும் விலையிலும் மேம்பாடுகள் கொள்கிறது. பீடபூமி பிரதேசத்தில் வளர்வதால், காய்கறி மற்றும் பழங்களில் பூச்சி கொல்லி மருந்து பயன்பாட்டு அளவு உள்பிரதேசங்களில் இருந்ததை விட குறைவாக உள்ளது. இதற்கிடையே போக்குவரத்து செலவு குறைவாக இருப்பதால், உள்ளூர் காய்கறி பழங்கள் மிக குறைந்த விலையில் விற்கப்படுகின்றன. பொருளாதார மற்றும் சமூக வளர்ச்சி, நகரமயமாக்கத் தூண்டுதல் ஆகியவற்றுடன், காய்கறி மற்றும் பழங்களின் மீது லாசா நகரம் கொண்டுள்ள தேவை அதிகரிப்பது உறுதி. முன்மாதிரி தோட்டத்தின் உற்பத்தி திறனை உயர்த்தி, மேலதிக விவசாயிகளை வறுமையிலிருந்து விடுவித்து செல்வம் பெறச் செய்யப் பாடுபடுவார்கள் என்கிறார் ரென் பு ஜியுங்.