ஏபெக் அமைச்சர் நிலை கூட்டத்தில் ஆசிய-பசிபிக் தடையில்லா வணிக மண்டலத்தின் நெறிவரைபடம் வகுப்பது பற்றி ஒத்த கருத்தை எட்டிய பிறகு, ஆசியப் பொருளாதாரத்தின் ஒருமைப்பாட்டை முன்னேற்றுவது இவ்வுச்சிமாநாட்டில் விவாதிக்கும் முக்கிய அம்சமாகும். இது குறித்து, சிலி அரசுத் தலைவர் மிஷேர் பாச்சேரேட் அம்மையார் கூறியதாவது,
ஆசிய-பசிபிக் தடையில்லா வணிக மண்டலத்தின் நெறிவரைபடத்தை நனவாக்குவதற்கு நாம் மிகவும் ஆதரவளிக்கிறோம். இப்பிரதேசத்தின் ஒருமைப்பாட்டு வளர்ச்சிப் போக்கிற்கு அது மிகவும் துணை புரியும். பசிபிக் கூட்டாளியுறவு உடன்படிக்கை உள்பட இப்பிரதேசத்தின் ஒருமைப்பாட்டு அமைப்பு முறைகள் ஒன்றிடம் இல்லாததை மற்றது நிறைவு செய்யும் வகையில் இவ்வரைபடம் அமையும் என்றார் அவர்.