இவ்வுச்சிமாநாட்டில் 4000 கோடி அமெரிக்க டாலர் மதிப்புடைய பட்டுப்பாதை நிதியத்தை சீனா உருவாக்கும் என்று சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங் 9ஆம் நாள் அறிவித்தார்.
பட்டுப்பாதைப் பொருளாதார மண்டலம் மற்றும் 21ஆம் நுற்றாண்டு கடல் பட்டுப்பாதையின் வழியிலுள்ள நாடுகளின் அடிப்படை வசதிக் கட்டுமானம், மூலவள வளர்ப்பு, தொழில் ஒத்துழைப்பு முதலியவற்றுக்கு இந்த நிதியம் நிதி ஆதரவு அளிக்கும். சீனாவின் இந்நடவடிக்கையை உச்சிமாநாட்டில் பங்கேற்ற தொழில் மற்றும் வணிகத் துறைப் பிரதிநிதிகள் வெகுவாகப் பாராரட்டியுள்ளனர். சீன வங்கித் தலைமை இயக்குநர் தியேகோலி கூறியதாவது
ஆசிய அடிப்படை வசதி வங்கியைக் கட்டியமைக்க சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் அறிவித்துள்ள பட்டுப்பாதை நிதியம் கட்டுமானத்தின் உந்து ஆற்றலாக இருக்கும். ஆசிய-பசிபிக் பிரதேசச் சந்தையை வளர்ப்பதில் மேலும் அதிகமான ஆசிய நாடுகளும் தொழில்நிறுவனங்களும் கலந்து கொண்டு அரசின் ஆதரவோடு பங்காற்ற வேண்டும் என்று அவர் விருப்பம் தெரிவித்தார்.