• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
சிக்கல்
  2015-01-08 15:37:48  cri எழுத்தின் அளவு:  A A A   


2014ஆம் ஆண்டு கடந்து விட்டது. சீன வானொலி தமிழ் ஒலிபரப்பு, சிறப்பாக ஐந்து சொற்களைத் தேர்ந்தெடுத்து, கடந்த ஓராண்டில் உலகளவில் நிகழ்ந்த முக்கிய அம்சங்களைத் தொகுத்து பதிவு செய்கிறது. இக்கட்டுரையின் குறிப்புச் சொல் சிக்கல் என்பதாகும்.

விளையாட்டு அரங்கத்தில் வெட்பத்தால் தளர்ந்த ஆஸ்திரேலிய டென்னிஸ் வீரர் பற்றி உங்கள் ஞாபகத்தில் இருக்கிறீர்களா?பருவத்தைத் தவறாக கவனித்தால் பனி ஆற்றில் சிக்கிய தவளையை நினைவு கொள்கிறீர்களா?மேலும், அர்ஜென்டீனாவில் வாழும் பனிக்கரடி அங்குள்ள வெட்பத்தைத் தாங்க முடியாததால் புதிய உறைவிடத்தை அவசரமாகத் தேட வேண்டியிருக்கும் கதை. இவையெல்லாம் 2014ஆம் ஆண்டில் மக்களின் கண்களை ஈர்த்த செய்திகளாகும். அவற்றுக்கு காரணம், உலகில் பசுங்கூட வாயுவின் வெளியேற்ற அளவு அதிகரித்து வருகின்றதே என்பதாகும். புள்ளி விபரங்களின் படி, 2000ஆம் ஆண்டு முதல் 2010ஆம் ஆண்டு வரையான 10 ஆண்டுகளில், வரலாற்றில் பசுங்கூட வாயுவின் வெளியேற்ற அளவு மிக விரைவாக அதிகரித்த ஆண்டுகளாகும். இந்நிலைமையைப் பொருள்படுத்தமால் இருந்தால், நடப்பு நூற்றாண்டின் இறுதியில் பூமியின் மேற்புற சராசரி வெட்பம் குறைந்தது 3.7 டிகிரி செல்சியஸ் அதிகமாகும் என்று நிபுணர்கள் முன்னெச்சரிக்கை விடுக்குதுள்ளனர்.

பதற்ற நிலைமை குறித்து, 2014ஆம் ஆண்டில், ஐ.நா தலைமையில் சர்வதேச மாநாடுகள் மூன்று முறையாகவும், நாடுகளுக்கிடையேயான பேச்சுவார்த்தைகள் இரண்டு முறையாகவும் நடைபெற்றன. மேலும், எண்ணற்ற சர்வதேச கூட்டங்கள் காலநிலை மாற்ற பிரச்சனையில் முக்கியத்துவம் கொடுத்துள்ளன. காலநிலை மாற்ற பிரச்சினையைத் தீர்க்க, சர்வதேச சமூகம் எந்த வகை முயற்சிகளை மேற்கொண்டுள்ளது? அவற்றின் வளர்ச்சிப் போக்கு எப்படி?சீன அரசு எப்படி பங்களிக்கிறது?

காலநிலை மாற்றத்தின் பாதிப்பைச் சமாளிக்க, எவ்விதத்திலும் தாமதம் செய்யக் கூடாது என்று ஐ.நா தலைமைச் செயலாளர் பான் கி மூன் குறிப்பிட்டார்.

கடுமையான நிலைமை குறித்து, பசுங்கூட வாயு வெளியேற்ற அளவைக் குறைக்கும் குறிக்கோள்களைப் பல வளர்ந்த நாடுகளும் வளரும் நாடுகளும் இயற்றியுள்ளன.

1 2 3
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040