2030ஆம் ஆண்டின் காலநிலை மற்றும் எரியாற்றல் கொள்கை குறிக்கோளை ஐரோப்பிய ஒன்றிய ஆணையம் 2014ஆம் ஆண்டு ஜனவரி வெளியிட்டது. 2030ஆம் ஆண்டுக்குள், ஐரோப்பிய ஒன்றியத்தின் உறுப்பு நாடுகள் வெளியேற்றும் பசுங்கூட வாயுவின் அளவு, 1990ஆம் ஆண்டில் இருந்த்தை விட மேலும் 40 விழுக்காடாக குறைய வேண்டும். அதேவேளை, ஐரோப்பிய ஒன்றியத்தின் எரியாற்றல் கட்டமைப்பில், புதுப்பிக்கவல்ல எரியாற்றல் வகிக்கும் விகிதம் குறைந்தது 27 விழுக்காடாக இருக்க வேண்டும் என்று அக்குறிக்கோள் விதிதுள்ளது.
வளரும் நாடுகளில் மிகப் பெரிய நாடான சீனா, காலநிலை மாற்றப் பிரச்சினையைச் சமாளித்து, எரியாற்றலைச் சிக்கனப்படுத்தி பசுங்கூட வாயு வெளியேற்றத்தைக் குறைப்பதில் முக்கிய பங்களித்துள்ளது. தொழில் கட்டமைப்பை மேம்படுத்துவது, எரியாற்றலின் பயனை உயர்த்துவது, எரியாற்ற கட்டமைப்பை சீராக்குவது, சோதனையிலுள்ள கரி குறைந்த இடங்களை விரிவாக்குவது முதலிய நடவடிக்கைகளை இதுவரை சீனா செயல்படுத்தி வருகிறது. கரி குறைந்த பசுங்கூட வாயு வெளியேற்ற அளவைக் குறைப்பதில் சீனா குறிப்பிடத்தக்க சாதானகளைப் பெற்றுள்ளது.
சீனாவில் உற்பத்திக்கான கரியமில வாயு வெளியேற்ற அளவு குறிப்பிடத்தக்க அளவில் குறைந்துள்ளது. 2005ஆம் ஆண்டில் இருந்ததை விட, 2013ஆம் ஆண்டு உற்பத்திக்கான கரியமில வாயு வெளியேற்ற அளவு 28.56 விழுக்காடு குறைந்துள்ளது. சுமார் 25 டன் கனமான கரியமில வாயுவுக்கு அது சமமாகும் என்று சீன வளர்ச்சி மற்றும் சீர்த்திருத்த ஆணையத்தின் துணைத் தலைவர் சியே ஜென் குவா தெரிவித்தார்.