• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
சிக்கல்
  2015-01-08 15:37:48  cri எழுத்தின் அளவு:  A A A   

பல்வேறு தரப்புகள் தத்தம் பசுங்கூட வாயு வெளியேற்ற அளவைக் குறைக்கும் குறிக்கோளை இயற்றுவதை தவிர, காலநிலை மாற்ற பிரச்சினையைச் சமாளிப்பதில் நாடுகளுக்கிகடை ஒத்துழைப்பும் அதிக முக்கியத்துவம் வாய்ந்தது. 2014ஆம் ஆண்டு ஐ.நா தலைமையிலான லிமா காலநிலை மாற்ற மாநாடு நடைபெற்றதை முன்னிட்டு, காலநிலை தொடர்பான சீன-அமெரிக்க கூட்டறிக்கை ஒன்றைச் சீனாவும் அமெரிக்காவும் 2014ஆம் ஆண்டு நவம்பர் 12ஆம் நாள் கூட்டாக வெளியிட்டன.

பல ஆண்டுகளாக, உலகில் காலநிலை மாற்ற பிரச்சினையைச் சமாளிக்கும் போக்கில், சீனா பொறுப்புடைய நாடாக கலந்துகொண்டு வருகிறது. சீனாவின் முயற்சிகள் சர்வதேச சமூகத்தின் பாராட்டுக்களைப் பெற்றுள்ளன. ஐ.நா வளர்ச்சி திட்ட ஆணையத்தின் தலைவர் ஹேலென் க்லாக் அம்மையார் கூறியாதாவது,

காலநிலை மாற்றத்தைச் சமாளிப்பதில் சீனா மாபெரும் முயற்சிகளை செய்து வருகிறது. பெய்ஜிங்கில் நடைபெற்ற ஏபெக் மாநாட்டில், காலநிலை மாற்றத்தைச் சமாளிப்பது தொடர்பான கூட்டறிக்கை ஒன்றை சீன-அமெரிக்க அரசு தலைவர்களும் கூட்டாக அறிவித்தனர். வளரும் நாடுகளுக்கு இது அதிக முக்கியத்துவம் வாய்ந்தது என்றார் அவர்.

பல ஆண்டுகளின் முயற்சிகளுக்குப் பிறகு, காலநிலை மாற்றத்தைச் சமாளிப்பதில் சர்வேதச சமூகம் குறிப்பிடத்தக்க வளர்ச்சி பெற்றுள்ளது. இருந்த பொதிலும், பொது ஆனால் வேறுப்பாடுடைய பொறுப்பில் வளரும் நாடுகளுக்கும் வளர்ந்த நாடுகளுக்குமிடையில் தெளிவான வேற்றுமை நிலவுகிறது.

பல்வேறு நாடுகளின் நிலைபாட்டை ஒருங்கிணைக்கும் வகையில், பல்வேறு நாடுகள் சுய விருப்பப் படி பங்களிப்பதை தற்போதைய காலநிலை பேச்சுவார்த்தை முன்மொழிந்துள்ளது. இந்த முன்நிபந்தனையில், வேற்றுமையை தீர்க்காமல் இருந்தாலும், பல்வேறு நாடுகளின் மனப்பாங்கு சிக்கலாக ஒன்று சேர்ந்து வருகிறது.

2014ஆம் ஆண்டின் கடைசி சர்வதேசத் தன்மையுடைய காலநிலை மாற்ற மாநாடாக ஐ.நாவின் லிமா காலநிலை மாற்ற மாநாடு நிறைவடைந்துள்ளது. சிக்கலான பேச்சுவார்த்தை மற்றும் ஆலோசனையின் மூலம், அம்மாநாட்டில் கலந்துகொண்ட பல்வேறு நாடுகள் இறுதியில் ஒப்பந்த வரைவில் கையொப்பமிட்டுள்ளன. 2015ஆம் ஆண்டு பாரிஸ் காலநிலை மாற்ற மாநாட்டில் உருவாக்கப்படும் உலக காலநிலை ஒப்பந்தத்திற்காக அடிப்படையை அது படைத்துள்ளது.

புதிய வழிமுறையில், 2020ஆம் ஆண்டுக்குப் பின் சட்ட கட்டுப்பாட்டு ஆற்றல் உடைய ஒரே ஒரு உலக காலநிலை ஒப்பந்தம் பாரிஸ் காலநிலை மாநாட்டில் திட்டப்படி உருவாக்கப்பட முடியுமா என்பதை பொருந்திருந்து பார்க்கலாம்.


1 2 3
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040