• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
வீழ்ச்சி
  2015-01-08 15:39:18  cri எழுத்தின் அளவு:  A A A   


2014ஆம் ஆண்டு சர்வதேச சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய் விலை, கோடைக்காலத்தில் உயர் பதிவாகிய பின் வீழ்ச்சி அடைந்தது. ஆண்டின் நடுப்பகுதியில் ஒரு பீப்பாய்க்கு 110 அமெரிக்க டாலரிலிருந்து தற்போதைய 50க்கு மேற்பட்ட அமெரிக்க டாலராக குறைந்த இந்த விலை, கொந்தளிப்பான அலை போல் காணப்படுகிறது. எண்ணெய் விலை குறைவுக்கான காரணம் என்ன? குறைந்து வரும் எண்ணெய் விலையிலிருந்து சீனா நன்மை பெறலாமா? 2015ஆம் ஆண்டு எண்ணெய் விலையில் எந்த மாற்றம் ஏற்படும்? உள்ளிட்ட கேள்விகளோடு, இன்றைய நிகழ்ச்சியைக் கேட்டு ரசியுங்கள்.

கடந்த ஜுன் திங்கள் முதல் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்து வருகிறது. இருப்பினும், நவம்பர் 27ஆம் நாள் நடைபெற்ற எண்ணெய் ஏற்றுமதி நாடுகள் அமைப்பின் அமைச்சர் நிலைக் கூட்டத்தில், கச்சா எண்ணெயின் தின உற்பத்தி அளவு 3 கோடி பீப்பாய்களை நிலைநிறுத்துவதென முடிவு எடுக்கப்பட்டது. இதன் விளைவாக, டிசம்பர் திங்களில் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து பெருமளவில் குறைந்து வருகிறது. ரஷியா, வெனிசூலா, மெக்சிகோ உள்ளிட்ட நாடுகளுக்கு இது கெட்ட செய்தி தான். இந்த நாடுகள் குறைவான எண்ணெய் விலையால் கடும் நிதி அழுத்தத்தைச் சந்தித்துக் கொண்டிருக்கின்றன.

ரஷியா முதலில் பாதிக்கப்பட்டுள்ளது. கடந்த சில திங்கள்காலத்தில் ரூபிள் மதிப்பு தொடர்ந்து குறைந்து வருகிறது. எப்போதும் வலிமைமிக்க தோற்றம் அளிக்கும் ரஷிய அரசுத் தலைவர் புதின், 2 ஆண்டுகள் தொடரக்கூடும் பொருளாதார பின்னடைவை ரஷியா எதிர்கொள்ளும் என்பதை ஏற்றுக்கொள்ள வேண்டியிருக்கிறார். அந்நாட்டின் நிதியமைச்சர் சிலுயனொவ் பேசுகையில்—

"ரூபிள் மாற்று விகிதம் மற்றும் எண்ணெய் விலை தொடர்ந்து தற்போதைய நிலையில் இருந்தால், 2015ஆம் ஆண்டு ரஷியாவுக்கு 50 ஆயிரம் கோடி ரூபிள் இழப்பு ஏற்படும்" என்றார் அவர்.

1 2 3
உங்கள் கருத்தை பதிவு செய்ய
கடைசிச் செய்தி
• 66 ஐ.எஸ் ஆயுததாரிகள் ஈராக்கில் கொல்லப்பட்டுள்ளனர்
• அறைகூவலைச் சமாளிக்க ஆப்கான் அரசுத் தலைவரின் வேண்டுகோள்
• சிங்காய்-திபெத் பீடபூமியில் துவங்கும் ஆய்வுக்கு ஷிச்சின்பிங் வாழ்த்து
• குன்மிங்கில் புத்தாக்கம் பற்றிய பரிமாற்றம்
• பின்லாந்தில் நிகழ்ந்த பயங்கரவாத தாக்குதலுக்கு ஐ.நா. கண்டனம்
• அசாம் மாநிலத்தில் வெள்ளத்தால் பாதிப்பு
• உத்தர பிரதேசத்தில் தொடர்வண்டி விபத்து: 23 பேர் சாவு
• பெய்ஜிங்கில் ஆரோக்கிய பட்டுப்பாதை எனும் கருத்தரங்கு
• ஸ்பெயினில் பயங்கரவாதத் தாக்குதலுடன் தொடர்புடைய 5 பேர் பலி
• பயங்கரவாத தாக்குதலுக்குப் பின் ஸ்பெயினில் துக்கம் அனுசரிப்பு
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040