• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
வீழ்ச்சி
  2015-01-08 15:39:18  cri எழுத்தின் அளவு:  A A A   

இவ்வாண்டு எண்ணெய் விலை குறைவு, ஓபெக் எனப்படும் எண்ணெய் ஏற்றுமதி நாடுகள் அமைப்பின் புறக்கணிப்பு நிலையுடன் நேரடி தொடர்புடையது என்று பொதுவாகக் கருதப்படுகிறது. முன்பு சர்வதேச எண்ணெய் விலை குறிப்பிட்ட ஒரு காலத்தில் வீழ்ச்சி அடைந்தால், இவ்விலையை நிதானப்படுத்தும் வகையில், ஓபெக் அமைப்பு எண்ணெய் உற்பத்தி அளவைக் குறைக்கும் நடவடிக்கையை மேற்கொள்வது வழக்கம். ஆனால் தற்போதைய நிலையில் ஓபெக் அமைப்பு இத்தகைய நடவடிக்கையை எடுக்கவில்லை. செய்தியாளரின் கேள்விக்குப் பதிலளிக்கையில், ஓபெக் அமைப்பின் தலைமைச் செயலாளர் கூறியதாவது—

"எண்ணெய் உற்பத்தி அளவு மீது ஏன் இவ்வளவு அதிகமான கவனம் செலுத்துகிறீர்கள்?உயர் உற்பத்தி அளவு எண்ணெய் விலையை குறைத்தால், எண்ணெய் பயன்பாட்டாளருக்கு நன்மை பயக்கும் அல்லவா? பெட்ரோல் விலை குறையும் அல்லவா? இந்த தொழில் அல்லது எண்ணெய் ஏற்றுமதி நாட்டைச் சேர்ந்தவர் எண்ணெயின் உயர் உற்பத்தி ஏற்படுத்திய விலை குறைவின் மீது கவனம் செலுத்தலாம். செய்தியாளரான நீங்கள் இதிலிருந்து மகிழ்ச்சி அடைய வேண்டும்" என்று அவர் கூறினார்.

ஆனால், தற்போது எண்ணெய் விலை குறைந்து வரும் நிலை, நெருக்கடியை ஏற்படுத்தவில்லை என்று சௌதி அரேபியா, கத்தார், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், குவெய்த் உள்ளிட்ட வளைகுடா பிரதேசத்தைச் சேர்ந்த எண்ணெய் உற்பத்தி நாடுகள் கருதுகின்றன. மேலும், இந்த நாடுகள் தற்போதைய எண்ணெய் விலை குறைவைப் பயன்படுத்தி அவை வெளிப்படையாக தெரிவிக்க விரும்பாத அரசியல் நோக்கத்தை நிறைவேற்றிக் கொண்டிருக்கின்றன என சிலர் கருத்துத் தெரிவித்தனர். குவெய்த் எண்ணெய் நிறுவனத்தின் செயல் தலைவர் ஹாட்செம் கூறியதாவது—

"எண்ணெய் விலையின் ஏற்றத்தாழ்வு, குறைவு கூட, குறிப்பிட்ட இடைவெளியில் திரும்பத் திரும்ப நிகழ்கிறது. எண்ணெய் ஏற்றுமதி நாடுகள், குறிப்பாக வளைகுடா நாடுகளின் எண்ணெய் உற்பத்தி அளவு, சுழற்சியோட்டத்தைச் சார்ந்த ஏற்றத்தாழ்வினால் பாதிக்கப்படாது. தொலைநோக்கு திட்டம் தீட்டியுள்ள இந்த நாடுகள், எண்ணெய் உற்பத்தி அதிகரிப்பை நிலைநிறுத்தும்" என்று அவர் கூறினார்.

1 2 3
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040