• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
வீழ்ச்சி
  2015-01-08 15:39:18  cri எழுத்தின் அளவு:  A A A   

சீன எரியாற்றல் இணையத்தின் தலைமை தகவல் அலுவலர் ஹான் சியௌபிங் இத்தகைய கூற்று குறித்து பேசுகையில், எண்ணெய் உற்பத்தி நாடுகள் போட்டியிட்ட விளைவு தான் இது என்று தெரிவித்தார்.

"ரஷியா மீது அமெரிக்கா தடை நடவடிக்கை மேற்கொள்வதுடனும், இதில் சௌதி அரேபியா கலந்து கொள்வதுடனும் இது தொடர்புடையது. மேலை நாடுகளின் தடை நடவடிக்கையைச் சமாளிக்கும் வகையில், எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுவை ரஷியா ஆசிய சந்தைக்கு விற்பனை செய்ய வேண்டும். ஆனால் ஆசியாவில் சௌதி அரேபியா தனது நலன்களைப் பாதுகாக்க வேண்டுமானால், உற்பத்தி அளவை அதிகரித்து விலையைக் குறைக்க வேண்டியிருக்கிறது. அத்துடன் சௌதி அரேபியா தற்போதைய வாய்ப்பைப் பயன்படுத்தி அமெரிக்காவுடன் போட்டியிட விரும்புகிறது. எண்ணெய் விலையை அது மேலும் குறைத்தால், அமெரிக்காவின் சந்தை இடங்கள் குறையும்" என்று ஹான் சியௌபிங் கூறினார்.

சிக்கலான சர்வதேச அரசியல் காரணிகளால், எண்ணெய் விலை எதிர்வரும் குறிப்பிட்ட காலத்தில் தொடர்ந்து குறையும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார். போட்டியிடும் பின்னணியிலும் தொழில் நுட்ப புரட்சியிலும் குறுகிய காலத்தில் எண்ணெய் விலை அதிகரிக்க சாத்தியம் குறைவு. வரலாற்றில் இத்தகைய நிலைமை ஏற்பட்டது. அது தொடர்ந்த காலம் ஓரளவு நீளமானது. எனவே தற்போதைய நிலைமை ஒரு காலத்தில் தொடரும் என்று அவர் குறிப்பிட்டார்.

சீனச் சமூக அறிவியல் கழகத்தின் தொழில் துறை பொருளாதார ஆய்வகத்தின் ஆய்வாளர் ஷி டான் ஹான் சியௌபிங்கின் கருத்தை ஒப்புக்கொண்டார். அவர் கூறியதாவது—

"விலையில் காணப்பட்ட எந்த ஏற்றத்தாழ்வும் குறிப்பிட்ட காலம் தொடரும். தற்போது உலகப் பொருளாதார மீட்சி மதிப்பீட்டின் நிலையை எட்டவில்லை. வினியோகம் அதிகரிக்கும் நிலையில், எண்ணெய் விலை அதிகரிக்க வாய்ப்பில்லை" என்று ஷி டான் தெரிவித்தார்.

தற்போது உலகளவில் கச்சா எண்ணெய் இறக்குமதி நாடுகளில் சீனா முதலிடம் வகிக்கிறது. பெருமளவு குறைந்து வரும் எண்ணெய் விலை சீனாவுக்கு நல்ல செய்தியாக அமையுமா என்ற கேள்விக்கு பதிலளிக்கையில், குறுகிய காலத்தில் இது சீனாவுக்கு நன்மை தந்த போதிலும், ஓரளவு பாதிப்பை ஏற்படுத்தும் என்று ஹான் சியௌபிங் கருத்துத் தெரிவித்தார்.


1 2 3
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040