• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
அவ்வேகம்
  2015-01-08 16:22:37  cri எழுத்தின் அளவு:  A A A   


2014ஆம் ஆண்டு உலகப் பொருளாதார நிலையை மீட்டாய்வு செய்யும் போது, அவ்வேகம் எனும் சொல் மக்களின் கண்களில் காணப்படுகிறது. சர்வதேச நாணய நிதியம், உலகப் பொருளாதார மதிப்பீட்டு எண்ணைத் தொடர்ந்து குறைத்து வருகிறது. கடந்த அக்டோபர் 7ஆம் நாள் வெளியான உலகப் பொருளாதர முன்னாய்வு என்ற அறிக்கையில் இந்த மதிப்பீட்டு எண் 3.3 விழுக்காடாகக் குறைக்கப்பட்டுள்ளது. சர்வதேச நாணய நிதியத்தின் தலைமை இயக்குநர் லாச்சாட் அம்மையார் இது பற்றி கூறியதாவது

"பொதுவாக உலகப் பொருளாதாரம் மீட்சி பெற்று வருகிறது. ஆனால் இப்போக்கு மிகவும் மெதுவாகச் செல்கிறது. பல்வேறு நாடுகளும் சரியான கொள்கைகளைச் சேர்ந்து மேற்கொண்டால் ஒழிய, உலகப் பொருளாதாரம் நீண்டக்காலமாக தாழ்ந்த நிலையில் இருக்கும்."என்றார் அவர்.

பொருளாதாரத்தின் மந்த நிலைக்கு குறிப்பிட்ட எடுத்துக்காட்டாக ஜப்பான் இருக்கிறது. அபேவின் பொருளாதாரவியல் தத்துவம், 2014ஆம் ஆண்டில் முற்றிலும் தோல்வியடைந்துள்ளது. ஜப்பான் சமூக ஜனநாயகக் கட்சியின் தலைவர் ஜி தியென் ச்சோங் ச்சு கூறியதாவது "அபேவின் பொருளாதாரவியல் தத்துவம், செல்வமுடையோருக்குச் சேவை புரியும் பொருளாதாரக் கொள்கையாகும். அதனால் உள்நாட்டுத் தேவை அதிகரிக்காது. பிரதிநிதிகள் அவையைக் கலைத்து, தேர்தலை நடத்துவதன் நோக்கம், இத்தத்துவத்தின் தோல்வியை மூடிமறைப்பது தான்."என்று அவர் கூறினார்.

2014ஆம் ஆண்டு அமெரிக்கப் பொருளாதாரம், உலகப் பொருளாதார மந்த நிலையில் மிதமாக வளர்ந்து வருகிறது. புள்ளிவிபரங்களின்படி, இரண்டாம் மற்றும் மூன்றாம் காலாண்டுகளில் அமெரிக்க மொத்த உற்பத்தி மதிப்பு, முறையே 4.6 விழுக்காடு மற்றும் 3.9 விழுக்காட்டை அடைந்துள்ளது. இந்த மீட்சி பெற்ற நிலையில், அமெரிக்க மத்திய வங்கி கடந்த அக்டோபர் இறுதியில் மூன்றாவது சுற்று அளவுசார் தளர்வு கொள்கையை முடித்திருந்தது.

1 2 3
உங்கள் கருத்தை பதிவு செய்ய
கடைசிச் செய்தி
• ஹாங்காங், தாய்நாட்டுடன் இணைந்த 20ஆவது ஆண்டு நிறைவுக்கான சாதனைகளின் கண்காட்சி
• சீனாவின் லாங்மார்ச்-5 ஏவூர்தியின் 2ஆவது பரி சோதனை ஏவுகலன்
• வாங்யி:பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் பயணம் பற்றி ஆக்கப்பூர்வ பயன்
• பாகிஸ்தானில் வாகனத் தீ விபத்து
• ஆப்கானிஸ்தான் அரசுத் தலைவர்-சீன வெளியுறவு அமைச்சர் பேச்சுவார்த்தை
• சீன வெளியுறவு அமைச்சர்-பாகிஸ்தான் தலைமையமைச்சரின் தூதாண்மை ஆலோசகருடன் பேச்சுவார்த்தை
• 2ஆவது சீன-இந்திய சிந்தனை கிடங்குகள் கருத்தரங்கு
• திரைப்படத் துறையில் பிரிக்ஸ் நாடுகளின் ஒத்துழைப்பு
• அமெரிக்காவுடனான வர்த்தக மற்றும் முதலீட்டுத் தடையை நீக்க:அமெரிக்காவின் விருப்பம்
• சிச்சுவான் மாநிலத்தில் நிலச்சரிவில் சிக்கி சுமார் 100 பேர் மாயம்
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040