அமெரிக்கப் பொருளாதாரத்துடன் ஒப்பிட்டுப் பார்த்தால், ஐரோப்பிய யூரோ பிரதேசம் வீழ்ச்சி அடைகின்ற இன்னலில் சிக்கித் தவித்து வருகிறது. ஐரோப்பியப் பொருளாதாரத்தைத் தூண்டும் வகையில் ஐரோப்பிய ஒன்றியத்தின் புதிய தலைவர் ஜாங்கர் பதவி ஏற்றவுடன், 31 ஆயிரத்து 500 கோடி யூரோ மதிப்புள்ள முதலீட்டுத் திட்டத்தை முன்வைத்தார். ஆனால் ஆய்வாளர்கள் இத்திட்டம் குறித்து அதிக அக்கறை செலுத்தவில்லை. ஜெர்மனைச் சேர்ந்த ஆய்வாளர் ஷ்னேதர் கூறியதாவது
"தற்போது ஒரு கேள்வியை எதிர்நோக்கி வருகிறோம். இத்தகைய முதலீட்டுத் திட்டம் மூலம் பல்வேறு நாடுகளில் ஏற்படும் குறுகிய காலச் சீர்திருத்தம், ஐரோப்பிய யூரோ பிரதேசத்தில் கட்டமைப்பு நெருக்கடியைத் தீர்ப்பதற்கு எவ்வளவு பங்காற்ற முடியும்."என்று ஷ்னேதர் சுட்டிக்காட்டினார்.