ரூபிள் மதிப்பு குறைவு, மேலை நாடுகளின் தடை நடவடிக்கை, எண்ணெய் விலை வீழ்ச்சி முதலிய நிர்ப்பந்தத்தின் கீழ் ரஷியப் பொருளாதாரம், கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. பிரேசில், தென்னாப்பிரிக்கா, இந்தியா உள்ளிட்ட புதிதாக வளரும் நாடுகள் இதே பொருளாதார சிக்கலை எதிர்கொண்டு, புதிய தீர்ப்பைத் தேடி வருகின்றன. பிரிக்ஸ் நாடுகளின் ஒத்துழைப்பு முறைமையை ஆழமாக்க வேண்டுமென பிரேசில் துணை அரசு தலைவர் தெமேல் கருத்து தெரிவித்தார். அவர் கூறியதாவது
"ஐந்து பிரிக்ஸ் நாடுகளிடையே தொடர்பு அதிகரிப்பதுடன், இந்த ஒத்துழைப்பு முறைமை அரசியல் ரீதியில் மேலும் நிதானமாக அமையும் என நம்புகிறேன்."என்றார் அவர்.
உந்து சக்தி இல்லாத உலகப் பொருளாதாரத்தைச் சமாளிப்பதற்கு, சீன நவீன சர்வதேச உறவு ஆய்வகத்தின் உலகப் பொருளாதாரப் பிரச்சினைக்கான நிபுணர் ச்சேன் ஃபாங் யீங் அம்மையார் கூறுகையில், கடந்த நவம்பர் நடைபெற்ற இருபது நாடுகள் குழுவின் உச்சிமாநாடு, ஒரு சிறந்த முன்மாதிரியாகத் திகழ்கிறது. உலக ஒத்துழைப்பை வலுப்படுத்துவது, நியாயமான போத்தாப் போட்டிச் சூழலை உருவாக்குவது முதலிய நடவடிக்கைகள், உலகப் பொருளாதாரத்தின் தொடர வல்ல வளர்ச்சிக்கு ஆற்றலை ஊட்டும் என்று கூறினார். அவர் மேலும் கூறியதாவது
"அடுத்த ஐந்து ஆண்டுக்காலத்தில் பொருளாதார வளர்ச்சி விகிதம், இப்போதைய விகிதத்தை விட 2 விழுக்காடு அதிகரிக்க வேண்டுமென பிரிஸ்பானில் நடைபெற்ற இவ்வுச்சிமாநாட்டில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இது வளர்ச்சி உந்து சக்தியாகும். புதிதாக வளரும் நாடுகள், வளர்ந்த நாடுகளுடன் ஒத்துழைக்க வேண்டும்."என்று ச்சேன் ஃபாங் யீங் அம்மையார் கூறினார்.