mi1501161.mp3
|
2014ஆம் ஆண்டில் பயணி விமானத் துறை மோசமாக இருக்கிறது. மார்ச் திங்கள் மலேசிய பயணியர் விமான நிறுவனத்தின் MH370 விமானம், தன்னுடைய தொடர்பை இழந்துள்ளது. ஜூலை திங்களின் முற்பாதியில் அதே நிறுவனத்தைச் சேர்ந்த MH17 விமானம் உக்ரேனில் விழுந்தது. ஜுலை பிற்பாதியில் சீன தைவானின் விமானம் ஒன்றும், அல்ஜீரியாவின் விமானம் ஒன்றும் அடுத்தடுத்து விழுந்துள்ளன. ஓராண்டிலே அதிகமான விமான விபத்துகள், அதில் ஏற்பட்ட மாபெரும் இழப்பு ஆகியவற்றினால், 2014ஆம் ஆண்டு விமான விபத்து ஆண்டாக அழைக்கப்பட்டது. குறிப்பாக, மலேசிய விமான நிறுவனத்தின் இரண்டு விமான விபத்துகளில் கண்டறியப்படாத புதிர், அதனால் ஏற்பட்ட சர்வதேச பாதிப்பு ஆகியவற்றினால் பொது மக்கள் இதில் எப்பொழுதும் கவனம் செலுத்திவருகின்றனர்.
2014ஆம் ஆண்டு மார்ச் 8ஆம் நாள் விடியற்காலை, மலேசிய விமான நிறுவனத்தைச் சேர்ந்த MH370 விமானம் கோலாலம்பூரிலிருந்து பெய்ஜிங்கிற்குப் புறப்பட்டது. 1:20 மணியளவில், 227 பயணிகளும் 12 விமான சேவைக்குழுவினர்களும் அடங்கிய இவ்விமானம் கட்டுப்பாட்டு மையத்துடனான தொடர்பை இழந்தது. இவ்விமானம் கடத்தப்பட்டுள்ளதா, பயங்கரவாத தாக்குதலுள்ளானதா என சந்தேகம் எழுந்தது. இரண்டு வாரங்கள் தொடர்ச்சியான தேடுதல் செய்த பிறகு, மலேசிய தலைமையமைச்சர் சோகமான செய்தியை அறிவித்தார்.
புதிய பகுத்தாய்வின் படி, சர்வதேச கடல் விவகார செயற்கைகோள் அமைப்பும் விமான விபத்து களஆய்வு அலுவலகமும் முடிவு செய்துள்ளன. MH370 விமானம், தெற்கு இடைவழி நெடுகிலும் பறந்தது. புதிய தகவலின் படி, MH370 வின் பயணம் இந்து மாகடலின் தெற்கில் முடிந்தது என்று நஜீப் ஆழமான சோகத்துடன் அறிவித்தார்.