இப்போது, MH17 விமான விபத்தின் மீது கள ஆய்வு தொடர்ந்து வருகிறது. விமானத்தின் வீழ்ச்சிக்கான காரணம் மேலதிக விரிவான ஆய்வுகளின் மூலம் உறுதிப்படுத்தப்படலாம். திட்டப்படி, MH17 விமான விபத்து பற்றிய இறுதி அறிக்கை 2015ஆம் ஆண்டின் கோடைக்காலத்தில் வெளியிடப்படும். இது குறித்து ராணுவ நிபுணர் சூங் ச்சுங்பிங் பேசுகையில், MH370ஐ விட, MH17 விமானம் பற்றிய உண்மை கண்டறிவது கடினமானதல்ல என்று சுட்டிக்காட்டினார்.
இதுவரையிலும், MH17 விமான விபத்து பற்றிய மெய்நிலை அறியப்படவில்லை. சிதிலங்களின் சேகரிப்பு உள்ளிட்ட பிரச்சினை இன்னும் தீர்க்கப்படவில்லை. பல்வேறு தரப்பும் அமைதி விருப்பத்தை அடிப்படையாக கொண்டால், MH17 விமானத்தின் புதிர் வெகுவிரைவில் தீர்க்கப்படுவது உறுதி என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
மலேசியாவின் MH370வின் காணாமல் போயிற்று, MH17வின் வீழ்ச்சி ஆகியவற்றுக்கான புதிர் வெகுவிரைவில் கண்டறியப்படும் என்று எதிர்ப்பார்க்கின்றோம். சர்வதேச சமூகம் எப்பொழுதும் மனித உயிருக்கு முன்னுரிமை அளித்து அதனை முதலிடத்தில் வைக்க வேண்டும்.