• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
புதிர்
  2015-01-08 15:44:39  cri எழுத்தின் அளவு:  A A A   

ஆமாம். முடிந்தது. வீழ்ந்தது அல்ல. இதனால், தேடுதல் தொடர்ந்து வருகிறது. 2014ஆம் ஆண்டு டிசம்பர் நடுப்பகுதி வரை, இந்து மாகடலின் தெற்குப் பகுதியில் சுமார் 11 ஆயிரம் சதுர கிலோமீட்டர் அளவில் தேடுதல் பணி மேற்கொள்ளப்பட்டது. திட்டப்படி, இந்தத் தேடுதல் நடவடிக்கை, 2015ஆம் ஆண்டு மே திங்கள் வரை தொடரக்கூடும். தற்போதைய தேடுதல் தொழில் நுட்பத்தையும் ஒடுக்கீட்டையும் பார்த்தால், இவ்விமானம் இறுதியில் கண்டறியப்படும் என்று சீனாவின் ராணுவ நிபுணர் சூங் ச்சுங்பீங் கருத்து தெரிவித்தார். அவர் கூறியதாவது:

தற்போதைய நிலைமையைப் பார்த்தால், பல நாடுகளும் சர்வதேச அமைப்பும் முக்கிய ஆற்றலைத் தேடுதலில் வழங்கியுள்ளன. ஆழ்கடல் ஆய்வு கலமும் பயன்படுத்தப்பட்டுள்ளது. உண்மையில் மனிதர் ஆற்றல், வசதி மற்றும் நிதி ஆதரவு பெருக்கப்பட்டது என்று அவர் குறிப்பிட்டார்.

தேடுதல் பணியில் குறிப்பிட்ட முன்னேற்றம் காணாமல் இருந்த போதிலும், மலேசிய அரசும், மலேசிய விமான நிறுவனமும் பெரும்பாலான பயணியர்களின் குடும்பத்தினர்களும் அற்புதம் ஏற்படுவதற்குக் காத்திருக்கின்றனர். இன்றும் மலேசியாவின் பல நகரங்களில் MH370க்கான பிரார்த்தனை அட்டைகளைக் காணலாம். விமானத்தின் சிதிலங்களைக் கண்டறியும் முன்பு, விருப்பம் உள்ளது. இவ்விமானத்தின் சேவைக்குழுவினர் ஒருவரின் குடும்பத்தினரான காங்சலேஸ் பேசுகையில், கடவுள் தம்மைக் கைவிடமாட்டார். ஒரு நாளிலே கனவர் திரும்புவார் என்று நம்புகின்றார்.

MH370ஐ போல மலேசிய விமான நிறுவனத்தின் விமானம்--MH17 விபத்து, புதிராக மாறியுள்ளது. ஜூலை திங்கள் 17ஆம் நாள் ஹாலாந்திலிருந்து கோலாலம்பூருக்குச் சென்ற இவ்விமானம், ரஷிய எல்லையை நெருங்கிய உக்ரைனின் கிழக்கில் வீழ்ந்து நொருங்கியது. விமானத்திலே 298 பேரும் உயிரிழந்தனர்.

இதுவரை, இந்த விபத்துக்கான காரணம் உறுதிப்படுத்தப்படவில்லை. ஹாலாந்து தேசிய பாதுகாப்பு குழு செப்டம்பர் 9ஆம் நாள் வெளியிட்ட பூர்வாங்க களஆய்வு அறிக்கையின் படி, MH17 விமானம், பெரும் ஆற்றலைக் கொண்ட பொருளின் தாக்குதலினால் வானில் சிதறியது. இவ்விமானம் வீழ்ந்ததற்கான காரணம், அறிக்கையில் தெளிவாக விளக்கப்படவில்லை. உக்ரைனின் கிழக்குப்பகுதியிலுள்ள அரசுசாரா ஆயுதப்படைப்பிரிவு ரஷியா வினியோகித்த ஆயுதங்களைப் பயன்படுத்தி இவ்விமானத்தைச் சுட்டு வீழ்த்தியது என்று உக்ரைனும் மேலை நாடுகளும் கருத்து தெரிவித்தன. ஆனால், உக்ரைன் அரசுசார ஆயுதப்படைப்பிரிவும் ரஷியாவும் இதை மறுத்துள்ளன.

1 2 3
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040