• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
சீன வசந்த விழாக் கொண்டாட்டம் பற்றிய பொது அறிவு
  2015-02-10 09:27:15  cri எழுத்தின் அளவு:  A A A   

正月十五:ச்சாங் மாதத்தின் 15ஆம் நாள், விளக்கு விழா கொண்டாட்டப்படும். அது வசந்த விழாவின் கடைசி நாளாக, கருதப்படுகிறது. அன்று யுவன் ஷியோ எனும் ஒரு வகை உணவை மக்கள் சாப்பிடுவர். யுவன் ஷியோ என்பது, வட்டமான சுவையான உணவு. இதைத் தவிர, விழாவின் போது பல்வகையான வண்ணமயமான விளக்கு காட்சிகளைக் கண்டுகளிக்கலாம். இந்த நாளோடு முழு வசந்த விழா நிறைவடைகிறது.

மேற்கூறியுள்ள செய்தி, சீன வசந்த விழா பற்றிய சில தகவல்கள் ஆகும். இதன் மூலம் சீன வசந்த விழா பற்றி பொதுவாக தெரிந்து கொள்ள முடியும். கீழே, சீன வசந்த விழா பற்றிய 3 கேள்விகள் இடம்பெறுகின்றன. ஒவ்வொரு கேள்விக்கு 4 பதில்கள் இருக்கும். அவற்றிலிருந்து சரியான விடையை நேரடியாக தேர்வு செய்யுங்கள். மின்னஞ்சல் மற்றும் வானஞ்சல் மூலம் எமது வானொலி நிகழ்ச்சியைக் கேட்ட நேயர்கள் இப்போட்டியில் கலந்துகொள்ளலாம். மின்னஞ்சல் மூலம் அளித்தால், தலைப்பில் வசந்த விழா அறிவு போட்டி என்று குறிப்பிட வேண்டும். வானஞ்சல் அனுப்பிய நேயர்களில் மூன்று நேயர்களை தேர்ந்தெடுப்போம். இதர வழிமுறைகளின் மூலம் பதிலளித்த நேயர்களில் 10 நேயர்களை தேர்ந்தெடுப்போம். அவர்களுக்கு நினைவுப் பரிசுப் பொருட்களை வழங்குவோம். பரிசுப் பெற்றவர்களின் பெயர்ப் பட்டியலை மார்ச் 11ஆம் நாள் எமது இணையதளத்தில் வெளியிடுவோம். இதில் உலா வந்து பார்க்கவும்...

1 இவ்வாண்டின் சீனாவின் விலங்கு என்ன

அ குதிரை ஆ ஆடு இ மாடு ஈ எலி

2 பொதுவாக சீனாவின் வசந்த விழா, சீன நாட்காட்டி ஆண்டின் கடைசி மாதத்தின் எந்த நாள் முதல் துவங்கும்

அ 8 ஆ 23 இ 28 ஈ 30

3 வசந்த விழாவின் மிக முக்கிய அம்சம் என்ன

அ குடும்பத்தினர் ஒன்று கூடுவது

ஆ பட்டாசு வெடிப்பது

இ சீன நாட்காட்டியின் கடைசி நாளிரவில் விருந்தை சாப்பிடுவது

ஈ கடந்த ஆண்டுக்கு வணக்கம் சொல்வது


1 2 3 4 5 6 7 8 9
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040