உணவில் காரம் அதிகமாக எடுத்துக் கொண்டால் குடற்புண் ஏற்படும் என்ற அச்சத்தால் நாம் அதனை குறைவாக சேர்த்துக் கொள்வோம். ஆனால் சீனாவின் ஹெனான் மாநிலத்தில் உள்ள ஷவோலி பகுதியைச் சேர்ந்த லி யோங்ஸியின் நிலமையோ வேறு. மிளகாய்களின் அரசன் என்று மாநில அரசே அவருக்கு பட்டம் அளித்துள்ளது என்றால் அவர் எத்தனை மிளகாய்களை உட்கொள்வார் என்று பார்த்துக் கொள்ளுங்கள்.
காலையில் எழுந்தால் நீரால் நாமெல்லாம் வாயை கொப்பளித்தால், யோங்ஸியோ, மிளகாய் தூள் கலந்து நீரில்தான் கொப்பளிப்பாராம். பல் துலக்குவதைவிட, சில மிளகாய்களை மென்று தின்றாலே போதும். அதுவே பற்களை சுத்தம் செய்து விடும் என்று அவர் கருத்து கொண்டுள்ளார்.
நாம் ஒரு மாதத்துக்குப் பயன்படுத்தும் மிளகாய்களை இவர் ஒரே நாளில் பயன்படுத்தி வருகிறார். மிளகாய் அல்லது காரம் இல்லாமல் சாப்பிடும் எந்த உணவும் அவருக்கு சுவையற்றவையானது. சாப்பிடும்போது சோறோ,. முட்டையோ அல்லது இறைச்சியோ என எதுவும் இல்லை என்றால் கூட யோங்ஸிக்குப் பரவாயில்லை. ஆனால், மிளகாய் இல்லை என்றால் அவ்வளவுதான்.