• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
மிளகாய்களை உண்பதில் அரசன்
  2015-11-12 17:02:26  cri எழுத்தின் அளவு:  A A A   

மிளகாய் விரும்பியான இவருக்கு அன்றாடும் அதிக அளவு மிளகாய்கள் தேவைப்படுகிறது. அதனால், அதனை விலை கொடுத்து வாங்கும் வகையில் அவரிடம் வசதி இல்லை. அதனால், தனது வீட்டுக்குப் பின்பகுதியல் உள்ள நிலத்தில் 8 வகையான மிளகாய்களை பயிரிட்டு பாதுகாத்து வருகிறார்.

முதலில் குறைந்த அளவு மிளகாய்களையே இவர் எடுத்துக் கொண்டு வந்துள்ளார். ஆனால் 10 ஆண்டுகளுக்கு முன்புதான் மிளகாய் அல்லது மிளகாய் பொடிகளை அதிகம் எடுத்துக் கொள்ளத் தொடங்கினார்.

அதற்குக் காரணம் என்னவென்றால், ஒருமுறை அவரது மகன் விபத்துக்குள்ளாகி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அப்போது ஆயிரக்கணக்கான ரூபாய் அவருக்குத் தேவைப்பட்டதால் உணவுகூட உட்கொள்ளாமல் விரக்தியுடன் இருந்து வந்துள்ளார். அவ்வாறு இருக்கும்போது ஒருமுறை தெருவில் மயங்கி விழுந்து விட்டாராம். அப்போது வழியில் வந்தவர்கள் அவரை அடையாளம் கண்டு கொண்டு, ஒரு உணவகத்துக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

அங்கு அவருக்கு வழங்கப்பட்டது என்ன தெரியுமா. 2 கிண்ணங்கள் நிறைய மிளகாய் பொடியும், ஒரு குவளை நீரும்தான். அதை உட்கொண்டு தனது வயிற்றுப்பசியை அவர் ஆற்றிக் கொண்டார். இத்தனை அளவு மிளகாய் பொடிகளை சாப்பிட முடியும் என்றஉ அப்போதுதான் அவருக்கே விளங்கியுள்ளது.

அன்றிலிருந்துதான் அதிக அளவு மிளகாய்களை உட்கொள்ளத் தொடங்கிவிட்டார். இந்த சம்பவத்துக்குப் பிறகு, அன்றாடமும் சுமார் இரண்டரைக் கிலோ அளவிலான மிளகாய்களை தனது உணவாக அவர் எடுத்துக் கொண்டு வருகிறார்.

1 2 3
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040