• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
அழகு மிக்க காங்தின் காட்சித்தலம்
  2016-07-13 10:37:43  cri எழுத்தின் அளவு:  A A A   

உலகளவில் புகழ் பெற்ற பழைய நகர் ஒன்றை உங்களுக்குக் கூறுகிறேன். அதன் பெயர் காங்தின் நகர். இந்நகர் ஸிச்சுவான் வடிநிலம் மற்றும் திபெத் பீடபூமியை ஒன்றிணைக்கும் பகுதியில் அமைந்துள்ளது. மலையால், காங்தின் நகர் கிழக்கு மற்றும் மேற்கு பகுதியாகப் பிரிக்கப்பட்டுள்ளது. கிழக்கில் முக்கியமாக வானம் தொடும் விதம் மலைகளும் பள்ளத்தாக்குகளும் உள்ளன. அங்குள்ள பெரும்பாலான மலைகள் கடல் மட்டத்திலிருந்து 5000 மீட்டருக்கு உயரமானவை. மேற்கில் முக்கியமாக குன்றுகள் நிரம்பிய பிரதேசமாகும். பல்வேறு புவி அமைப்பினால் , ஒரே மலையில் நான்கு பருவங்கள் நிலவுவதைக் காண முடியும். பத்து கிலோமீட்டருக்குள் வெவ்வேறான காலநிலை தோன்றும் என்ற பழ மொழி பரவியுள்ளது.

அங்கு இயற்கை வளம் மிகுந்து காணப்படுகிறது. ஆடுகளும் மாடுகளும் எங்கெங்கும் மேய்ந்து வருவதைப் பார்க்க முடியும்.

திபெத் இனம், ஜியாங் இனம், மியௌ இனம் உள்ளிட்ட 17 இனத்தவர்கள் தலைமுறை தலைமுறையாக வாழ்ந்து வருகின்றனர். திபெத் இன மக்கள் அங்குள்ள முக்கியமான குடிமக்களாவர். பௌத்த மத கோயில்களை அவ்வப்போது காண முடியும். தனிச்சிறப்பு மிக்க திபெத் பாணி அங்குள்ள முக்கியமான காட்சிகளில் ஒன்றாகும். உற்சாகத்துடன் காணப்படும் திபெத் இனத்தவர்கள் உங்களை வரவேற்று ஹாதா அணியச் செய்வர். ஹாதா என்பது வெள்ளை நிறமான துணியாகும். ஹாதா அணிய செய்வது திபெத் இனத்தவர் விருந்தினர்களுக்கு மரியாதை மற்றும் வாழ்த்து தெரிவிக்கும் வழிமுறையாகும். தூய்மை, பற்றுறுதி, மதிப்பு என்பதென்ற பொருளை ஹாதா பிரதிநிதித்துவப்படுத்துகின்றது.

1 2 3
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040