• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
அழகு மிக்க காங்தின் காட்சித்தலம்
  2016-07-13 10:37:43  cri எழுத்தின் அளவு:  A A A   

முதலாவது,  குங் கா காட்சித்தலம். குங் கா மலையை, நீங்கள் பார்வையிடுவது முக்கியம். ஸிச்சுவான் மாநிலத்திலுள்ள முதல் உயரமான மலை அதுவாகும். கடல் மட்டத்திலிருந்து மலையுச்சி சுமார் 7500 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது. வானத்தைத் தொடும் விதம், கற்பீர்மாக காட்சியளிக்கின்றது..

மேலும், கடும் குளிர் மற்றும் காற்றின் பாதிப்பில், அது மிகவும் செங்குதான வடிவில் உள்ளது. தொலைவிலிருந்து பார்த்தால், மாபெரும் பிரமிடு போலக் காட்சியளிக்கும்.

சீனாவில் புகழ் பெற்ற பனி மலை அதுவாகும். இம்மலையில் ஏறுதல் என்பது மிகவும் கடினமான செயலாகும். 1932ஆம் ஆண்டு அமெரிக்காவின் அணி ஒன்று முதன்முறையாக இம்மலையுச்சியை வெற்றிகரமாக எட்டியது.

குங் கா மலையின் அருகில் சுமார் 100க்கும் மேலான பனி மலைகள் சூழ்ந்துள்ளன. இதனைப் பார்ப்பது இன்ப அதிர்ச்சியை பெறுவது போல உணர்வு ஏற்படும். மேலும்,  குங் கா காட்சித்தலத்தில் பத்துக்கும் மேலான ஏரிகள் பாய்ந்து ஓடுகின்றன. இவை பனி மலையடியில் அல்லது காட்டில் ஓடுகின்றன.

எனது அறிமுகத்தைக் கேட்கும் போது, குளிர் உணர்ச்சி உங்களுக்கு கிடைத்ததா? கவலைப்பட வேண்டாம். அங்கு வெப்ப ஊற்றுகளும் அதிகம். பனி மலைக் காட்சிப் பார்வையிடுவதோடு, வெப்ப ஊற்றில் குளிப்பது தலைசிறந்த தேர்வாகும், இல்லையா?

பனிக்கடியாறு, அங்குள்ள மற்றொரு காட்சித்தலமாகும். பனிக்கட்டியாற்றுக்கு மூன்று சிறப்புக்கள் உள்ளன. முதலாவது, அது குளிர் அதிகமாக இருக்காது. கோடைக்காலம் அல்லது இலையுதிர் காலத்தில் அதிகமான ஆடைகளை அணியத் தேவையில்லை. இரண்டாவது, பனிப்பாறை சரிவு. ஆண்டுமுழுவதிலும், பனிப்பாறை சரிவு காணப்படும். அதன் பரப்பளவு நூற்றுக்கணக்கான கன மீட்டராகும். மூன்றாவது, வெவ்வேறான சிறப்பு உருவங்கள். பனி மேசை, ஏரி, பாலம், காளான் முதலிய சிறப்பு காட்சிகள் உங்களுக்கு இன்பத்தைக் கொண்டு வரும். அவை புவியின் அதிசயமாகும்.

குங் கா காட்சித்தலத்தைப் பார்வையிடும் தலைசிறந்த காலம், மே மற்றும் ஜூன் திங்களாகும். அதன் நுழைவுச்சீட்டு 150 யுவான்.


1 2 3
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040