• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
அழகு மிக்க காங்தின் காட்சித்தலம்
  2016-07-13 10:37:43  cri எழுத்தின் அளவு:  A A A   

திபெத் மரபுவழி புத்தமதம் காங்தின் நகருக்குப் பரவலாகி ஆயிரத்துக்கும் மேலான ஆண்டுகள் ஆகிறது. உள்ளூர் மக்களின் மனத்தில் மத நம்பிக்கை ஆழ்ந்து பதிந்துள்ளது. விழாவின் போது, அங்கு பயணம் மேற்கொண்டால், உள்ளூர் பண்பாட்டை மேலும் நன்றாக அறிந்து கொள்ளலாம் என நம்புகிறேன். எடுத்துக்காட்டாக, சந்திர நாட்காட்டியின்படி, அக்டோபர் 25ஆம் நாள், ரென் தெங் ஹூய் எனும் திபெத் மரபுவழி புத்தமதத்தின் பாரம்பரிய விழா நடைபெறுவது வழக்கம். அதன் கொண்டாட்டம் இந்தியாவின் தீபாவளி போல இருக்கும். அன்று, கோயிலின் எல்லா சுவர்களிலும் கூரைகளிலும் தீபங்கள் ஏற்றி வைக்கப்படும்.  காங்தின் நகர் விளக்குகளின் ஒளியில் மூழ்கிவிடும்.

நீங்கள் இப்போது கேட்பது காங்தின் நகரில் நிகழ்ந்த காதல் கதையைப் பாராட்டும் பாடலாகும். சீனாவில் இப்பாடல் தெரியாதவர்கள் எவரும் இருக்க மாட்டர் என்று நினைக்கின்றேன்.

இப்பாடலுடன்,  காங்தின் நகரிலிலுள்ள முக்கிய காட்சித்தலங்கள் பற்றி உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

1 2 3
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040