• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
திபெத்தின் புனித ஏரி நமுசுவோ
  2016-11-09 10:32:23  cri எழுத்தின் அளவு:  A A A   

இன்றைய நிகழ்ச்சியின் கடைசியில், நமுசுவோ ஏரியின் கணவர் என கூறப்பட்ட நைன்சென்நங்ஹா  மலை பற்றி உங்களுக்கு அறிமுகப்படுத்த விரும்புகிறேன். திபெத்தில் மூன்று புனித மலைகளில் அது ஒன்றாகும். அது கடல் மட்டத்திலிருந்து சராசரியாக 6000 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது. ஆண்டுமுழுவதிலும் பனிக் காட்சி காணப்படலாம்.

அதன் தெற்கில் இயற்கைக் காட்சி அழகு மிக்க யாங் பா ஜிங் யாங் பா ஜிங் எனும் குன்று ஆகும். இயற்கைக் காட்சிகள் தவிரவும், அங்கு வளமான நில வெப்ப வளம் உள்ளது. நில வெப்ப அருங்காட்சியகம் என அது வெகுவாகப் பாராட்டப்பட்டுள்ளது. சீனாவில் மிகப் பெரிய நில வெப்ப மின்சார உற்பத்தி நிலையமும் அங்கு கட்டியமைக்கப்பட்டுள்ளது. வெப்ப ஊற்று அகமும் வெப்ப ஊற்று நீச்சல் அரங்கமும் அங்கு உள்ளன. இங்கு நீராடுவதன் மூலம், உடலின் சோர்வையும் சில நோய்களையும் குணப்படுத்தலாம். நமுசுவோ ஏரியைப் பார்வையிட்ட பின், இங்கு வெப்ப ஊற்றை அனுபவித்து மகிழலாம்.


1 2 3
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040