சீன அரசு நடைமுறைப்படுத்திய சீனத்தயாரிப்பு 2025 என்ற உத்திநோக்கு இலக்கின் முன்னேற்றத்துடன் சான்யி குழுமம் டிஜிடல்மயமாக்க உற்பத்தியை விரைவுபடுத்தி, பெரும் தரவுகளையும் சரக்கு வலைப்பின்னலையும் இணைக்கும் மேடையை உருவாக்கி, தற்சார்பு புதுப்பிக்க ஆய்வு வளர்ச்சியை மேம்படுத்தி வருகிறது. சீனத்தயாரிப்பை சீன உருவாக்கமாக மாற்றிக்கொள்ள முயற்சி செய்கிறது.
சான்யி குழுமத்தின் துணை ஆளுனர் ஹெ துங்துங் செய்தியாளரிடம் பேசுகையில், டிஜிடல்மயமாக்கத்தினால், இங்குள்ள அனைத்து உற்பத்தி கோடுகளையும் ஒரே நேரத்திலும் 30க்கும் கூடுதலான வேறுபட்ட இயந்திர சாதனங்களுடன் இணைத்து பொருத்தலாம். அவற்றின் மூலம் ஆயிரம் கோடி யுவான் மதிப்புள்ள உற்பத்திக்கு ஆதரவு கிடைக்கும் என்று அறிமுகப்படுத்திக் கூறினார்.
டிஜிடல்மயமாக்கமும் மென்பொருள் நிர்வாகமும் மிக முக்கியம். முதலில், உழைப்பாளர்கள், இயந்திரங்கள், மூலப்பொருட்கள், உற்பத்தி சாதனங்கள் முதலியவை இணையத்தில் பதிவு செய்யப்பட்டு இணைக்கப்படும். இவற்றைப் பற்றிய அனைத்து தரவுகளைச் சேகரித்து, எதிர் திசையிலிருந்து அவற்றை அறிவித்து கட்டுப்படுத்த முடியும் என்றும் ஹெ துங்துங் கூறினார்.